Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இனி Mickey Mouse உங்கள் சொத்து ! பொது பயன்பாட்டிற்கு வந்த மிக்கி மவுஸ் ! இது தான் காரணமா?

Mickey Mouse in public use : பிரபல கார்டூன் கதாபாத்திரமான மிக்கி மௌஸ் காப்புரிமை முடிந்ததை அடுத்து அதன் பொது பயன்பாடு மீதான தடை நீக்கப்படுவதாக…

Mickey Mouse in public use : பிரபல கார்டூன் கதாபாத்திரமான மிக்கி மௌஸ் காப்புரிமை முடிந்ததை அடுத்து அதன் பொது பயன்பாடு மீதான தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் தடை நீங்கி உள்ளது. இனிமேல் மிக்கி மௌஸ் கதாபாத்திரமும், மிக்கி மவுஸ் சம்பந்தமான டிஸ்னி நிறுவனத்தின் 95 வருட கால காப்புரிமையும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடைநீங்கி விட்டதாகவும், பொது பயன்பாட்டுக்கு வந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Mickey Mouse in public use
Mickey Mouse in public use

1928 ஆம் வருடம் ஸ்டீம்போட் வில்லி (Steamboat Willie) என்னும் அனிமேஷன் குறும்படத்தின் மூலமாக மிக்கி மவுஸ் கதாபாத்திரம் அறிமுகமானது. டிஸ்னி நிறுவனத்தால் அறிமுகமான இந்த மிக்கி மவுஸ், ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது. மிக்கி மவுஸ் தான் முதன் முதலில் ஆஸ்கர் விருது வென்ற காமிக்ஸ் கதாபாத்திரம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மக்கள் விரும்பும் இந்த மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று அதன் காப்புரிமையை வைத்திருந்த டிஸ்னி நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்நிலையில் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் 95 வருட காப்புரிமையானது டிஸ்னி நிறுவனத்திடம் இருந்து முடிவடைந்து விட்டது.

Mickey Mouse in public use

அமெரிக்க சட்டத்தின் படி, 95 வருடங்கள் வரை தான் காப்புரிமைகள் செல்லுபடியாகும் என்பதால் அதற்கான காப்புரிமை சமீபத்தில் நிறைவு பெற்றதாகவும், இதனால் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கான தடைகள் நீங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Mickey Mouse in public use
Mickey Mouse in public use

ஜனவரி மாதம் முதல், மிக்கி மவுஸ் கதாபாத்திரமானது பொதுப் பயன்பாட்டிற்கு எந்த ஒரு தடையும் இல்லை எனவும் அதன்படி பயன்படுத்துபவர்களிடம் டிஸ்னி நிறுவனம் எந்தவொரு உரிமையும் கோர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Read Also : கைக்கடிகாரம் ஒரு மினி மருத்துவரே!

இதையடுத்து மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை வைத்து இரண்டு திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அவற்றுள் ஒரு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. Mickey’s Mouse Trap என்ற தலைப்பில் இந்த படம் தயாராகி வருகின்றது.

இதுநாள் வரை அமைதியான வடிவிலான கதாபாத்திரத்தில் பார்க்கப்பட்ட மிக்கி மவுஸ் இந்த படத்தில் த்ரில் முறையில் களமிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திகில் நிறைந்த கதாபாத்திரத்தில் மிக்கி மவுஸ் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.