Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்குழந்தை பராமரிப்பு(Kajal) KanMai For Child Easy Made In Home | இயற்கை முறையில் குழந்தைகளுக்கு...

(Kajal) KanMai For Child Easy Made In Home | இயற்கை முறையில் குழந்தைகளுக்கு கண் மை தயாரிப்பது எப்படி ?

Date:

- Advertisement -

KanMai For Child : அக்காலம் முதல் இக்காலம் வரை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கண் மை தான் அழகு சேர்க்கிறது. கண்ணுபடக்கூடாது என்பதற்காக குழந்தைகளுக்கு கண் மை வைப்பார்கள். நம் மூதாதையர்கள் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்.

கண்களில் அழகு சேர்பதற்காகமட்டுமல்ல கண் மை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்தான் ஏனென்றால் கண் மை கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும். அதனால் தினமும் கண்களில் மை வைக்கும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

KanMai For Child Made In Home

அழகு சாதனம் தயாரிக்கும் நிறுவனங்கள் கண் மை தயாரிக்கின்றன, அவர்கள்தயாரிக்கும் கண் மைகளில் சில்வர் நைட்ரேட் செயற்கை நிறம், ஈயம்கரி போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

இதை பயன்படுத்துவதால் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும், தொடர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வேறு சில பிரச்சனைகளும் வர வழிவகை செய்யும், ஆகவே அவற்றை தவிர்த்துவிட்டு 100% இயற்கையான கண் மையை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவே உங்கள் கண்ணின் அழகை மேம்படுத்தும், கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வாங்க கண்மை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி ? | KanMai For Child

தேவையான பொருட்கள் :

நெய் -2டீ ஸ்பூன்
சந்தனப்பொடி -2டீ ஸ்பூன்
பாதம் பருப்பு -1
விளக்கெண்ணெய் -2டீ ஸ்பூன்
களிமண் விளக்கு -1
காட்டன் துணி

வீட்டில் கண் மை தயாரிக்கும் முறை :

சந்தன பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல கலக்கிக்கொள்ளவும், அதில் காட்டன் துணியை போட்டு நனைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைக்கவும் பிறகு உலர்ந்த துணியை விளக்கு திரி போல் உருட்டி கொள்ளவும். அந்த திரியை களிமண் விளக்கில் வைத்து அதோடு நெய் சேர்த்து விளக்கை தீபம் ஏற்றுவது போல் ஏற்றவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பின்னர் விளக்கினை ஒரு தட்டில் வைத்து அதனை சுற்றி கண்ணாடி அல்லது சில்வர் டம்ளர்களை வைத்து அதன் மீது சில்வர் தட்டு கொண்டு கவுத்துவிடவும் அதற்கு முன்னதாகவே சில்வர் தட்டில் விளக்கெண்ணய் தடவிக்கொள்ளவும் விளக்குமுழுவதும் எறிந்த பிறகு அந்த தட்டை எடுத்துப்பார்த்தால் தட்டில் கரி படிந்து இருக்கும். அந்த கரியை ஸ்பூன் அல்லது கத்தியை கொண்டோ சுரண்டி ஒரு சிறிய பாத்திரத்தில் சேமித்து கொள்ளவும்.

பிறகு நாம் பாதம் பருப்பை அடுப்பில் காட்டி தீய வைத்துக்கொள்ளவும்.
அதை நசுக்கி பவுடர் போல் வைத்துக்கொள்ளவும் அந்த பவுடரை சேமித்து வைத்துள்ள கரியில் சேர்த்து 1டீ ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக குழைத்து கொள்ளவும். உங்களுக்கு எந்த பதத்திற்கு தேவையோ அந்த அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கண்களுக்கு குளிர்ச்சி தரும் கருமையான இயற்கையாக தயாரித்த கண் மை ரெடி. இதை பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தினமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Most Watch : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories