Thursday, July 10, 2025
Homeஅர்த்தம்ரௌத்திரம் பழகு என்ற வார்த்தைக்கு என்னப்பொருள் | Rowthiram Meaning in Tamil

ரௌத்திரம் பழகு என்ற வார்த்தைக்கு என்னப்பொருள் | Rowthiram Meaning in Tamil

Date:

- Advertisement -

ரௌத்திரம் பழகு Meaning in Tamil: வி தமிழ் டிவி யின் வணக்கம்.. நண்பர்களே.. கோபம் என்பது எல்லோரிடமும் ஒளிந்திருக்கும் ஒரு குணமாகும்.. இந்த கோபத்தினை அனைவரிடமும் நாம் காட்டி விடவும் முடியாது. சிலர் சாதாரண விஷயத்திற்கு கூட கோபம் படுவார்கள். சிலர் என்னதான் பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

இருந்தாலும் ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு நபரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மற்றவர்கள் சொல்லும் போது “ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி. இவ்வாறு ரௌத்திரம் பழகு என்பதற்கு பொருள் என்ன என்பதை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Rowthiram Meaning in Tamil
Rowthiram Meaning in Tamil

இதையும் படிங்க :  இந்த வகை மீன்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

Rowthiram Meaning in Tamil : ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்

ரௌத்திரம் பழகு என்பது மகாகவி பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் ஒரு பகுதியாக உள்ளது. இதற்கான விளக்கத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயமான கோபம் என்று கூறலாம். அப்படியென்ன நியாயமுள்ள கோபம் என நீங்கள் நினைக்கலாம். சரி அதற்கான பொருளை இங்கு நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏதாவது ஒரு விஷயத்தில் அநீதி நடக்கும் போது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம் என்றுமே தவறு கிடையாது..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Rowthiram Meaning in Tamil

தேவையுள்ள இடத்தில், தேவையான நேரத்தில் நிச்சயம் கோபப்பட வேண்டும். அந்த கோபத்தில் உண்மையான நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு” என்பதற்கான பொருளாக இருக்கிறது.

அநீதி நடக்கக்கூடிய ஒரு இடத்தில் நாம் அதனை எதிர்த்து கேட்பது தர்மம். ஆனால் அந்த இடத்தில் நாம் அமைதியாக இருப்பது ரொம்ப கோழைத்தனமாகும். ஆகவே ஒருவர் கோபம் கொள்ள வேண்டிய நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அதுவே தேவை இல்லாத விஷயமாக இருந்தால் அதனை விட்டு விலகி செல்ல வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இன்றைய காலத்தில் நடக்கும் அநீதிகள் நாளை நம் வீட்டிற்குள்ளும் நடக்கும். தவறை பார்த்து தட்டி கேட்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு. அச்சம் தவிர்த்து “ரௌத்திரம் பழகுவோம்”.

தவறை கண்டால் கண்டிக்காமல் செல்வதை தவிர்க்க வேண்டும். எந்த இடத்தில் தவறு நடக்கின்றதோ அந்த இடத்திலேயே அதனை தட்டி கேட்க வேண்டும் என்று வளரும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

“ரௌத்திரம் பழகு” என்றால் நம் கடமை. அது ஆணுக்கு ஆண்மை.. அது பெண்ணுக்கு கவசம்.

இதையும் படிங்க : காரசாரமான சுவையில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இது மாதிரி ஒரு முறை செய்து பாருங்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories