Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்Pregnancy Symptoms in Tamil | நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா ? என்பதை கண்டுகொள்ள உதவும்...

Pregnancy Symptoms in Tamil | நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா ? என்பதை கண்டுகொள்ள உதவும் 9 அறிகுறிகள்.!

Date:

- Advertisement -

Pregnancy Symptoms in Tamil : ஒவ்வொரு பெண்களுக்கும் கர்பத்திற்கான அறிகுறிகள் வேறுபாடுகள் உள்ளதாக இருக்கும். கர்ப்பம் தரித்தலின் ஆரம்பம் அறிகுறிகள் மாதவிடாய் தள்ளி போவது மட்டும் இல்லை. மார்பகங்களில் வலி, முதுகு வலி, தளர்வு ஏற்படுதல், மற்றும் வாசனை உணர்வு என்று கர்ப்பத்திற்கு பலவித ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

இதோடு மட்டுமல்லாமல் கர்ப்ப அறிகுறிகளை வேறு வித்தியாசமாக கூட கண்டறியலாம். இருப்பினும், மாதவிடாய் சுழற்சியானது தள்ளி போவதுடன், ஒருசில அறிகுறிகள் தென்பட்டாலும், கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Pregnancy Symptoms in Tamil

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை சுலபமாக தெறித்து கொள்ள முடியும். அந்த 10 அறிகுறிகளையும் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

Pregnancy Symptoms in Tamil
Pregnancy Symptoms in Tamil

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 1 : சோர்வு :

கருவுற்றதற்கான அறிகுறிகள் ஒன்று சோர்வு, சாதாரணமாக ஒரு வேலையை செய்யும் போது திடீரென சோர்வு ஏற்பட்டால், அது உடலில் ஹார்மோன்கள் அதிகரிக்கும் காரணமாக இருக்கலாம். கருவுறும் பெண்களுக்கு இந்த உடல் சோர்வு பிரச்சனைகள் முதல் மூன்று மாதங்கள் வரை ஏற்படும். ஆகவே உங்களுக்கு அதிகப்படியான சோர்வுகள் ஏற்பட்டால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 2 : குமட்டல்

இந்த அறிகுறி பொதுவானது என்று சொல்லலாம். பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் இருக்கும் போது, இந்த குமட்டல் ஏற்படும். இந்த குமட்டல் காலையில் எழுந்த உடனும்,மாலை அல்லது இரவு நேரங்களில் வரக்கூடும் . இந்த குமட்டல் பிரச்சனைகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மாத கால கட்டத்தில் நுழையும் போது பெரும்பாலும் குறைந்து போகும்.

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 3 : அஜீரண கோளாறு

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக உள்ள போது நன்றாக பசி எடுக்கும்.ஆனால் சாப்பாடு சாப்பிட்டால் மந்தமாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்றால் சிலவகை ஹார்மோன்கள் செய்கின்ற வேலைகள் என்று சொல்லலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த ஹார்மோன்கள் கருத்தரிப்பதை ஊக்குவிக்கும் . ஆகவேதான் உடலில் ஜீரண சக்தி மெதுவாக செயல்படுகிறது. இதன் விளைவாக மந்தமாக இருக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 4 : உடல் சூடாக இருக்கும்

அதேபோல் உங்கள் உடலானது வழக்கத்திற்கு மாறாக சூடாக இருக்கும்.இதற்கும் சில வகையான ஹார்மோன்கள் செய்யும் வேலையே காரணம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அந்த சமையத்தில் உங்களின் உடலானது ஓய்வை மட்டுமே கேட்கும். குறிப்பாக நீங்கள் சோர்வாகவே காணப்படுவீர்கள். காலையில் எழுந்தாலும் உற்சாகம் இருக்காது. அதிக நேரம் தூங்குவீர்கள்.

Pregnancy Symptoms in Tamil

Read Also : ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 5 : அதிகம் வாசனையை உணருவீர்கள்

உங்களின் வழக்கத்திற்கு மாறாக சில வாசனைகள் உங்களுக்கு பிடிக்கும். சில வாசனைகள் குமட்டலை உண்டாகும்.

உணவு சமைக்கும் போது ஏற்படக்கூடிய வாசனையை விரும்ப மாட்டீர்கள். ஆனால் மண் வாசனை போலுள்ள மென்மையான வாசனைகளை அதிகம் விரும்புவீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 6 : மூச்சு திணறல்

நடக்கும் போதும் மாடிப்படி ஏறும் போதும் திடீரென மூச்சு திணறல் ஏற்படும்.இது கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறி என்று சொல்லலாம். கருவில் வளர்கின்ற குழந்தைக்கு ஆக்சிஜன் வாயு தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சின்ன குறுகிய இடைவெளி ஏற்படலாம்.

இந்த நிலைமையானது கர்ப்பகாலம் முழுதும் தொடரலாம். இந்த நிலைமையானது குழந்தை வளர்ந்து வரும் போது, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம் மேல் அழுத்தம் கொடுப்பதன் விளைவாகத்தான் ஏற்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 7 : அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி நீங்கள் சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளலாம்.

இரவு நேரங்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இதற்கு காரணம், உங்களுடைய உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்ற ஓய்வின்றி சிறுநீர் பை வேலை செய்கிறது என்று அர்த்தம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 8 : பின் முதுகுவலி

கர்ப்பமாக உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படும். முதுகு வலி ஏற்படாதபோது பின் முதுகு லேசாக தளர்வாக காணப்பட்டால், அது தசை நார்கள் தளர்ந்து வருவதனால் ஏற்படுகிறது.

இந்த பின் முதுகு வலியானது கர்ப்ப காலம் வரையிலும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கற்பத்தின்போது எடை அதிகரிப்பதாலும், ஈர்ப்பு விலகுவதன் காரணமாகவும் இந்த பின் முதுகு வலி ஏற்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்ப்பம் ஆனதற்கான அறிகுறிகள் 9 : இரத்த போக்கு

சில பெண்களுக்கு வழக்கத்தை விட மிக குறைவான இரத்தப்போக்கு ஏற்படும் இதை மாதவிடாய் என்று நினைத்துவிடக்கூடாது. அந்த இரத்தப்போக்கானது நிலைத்து இருக்காமல் நின்று விடும்.

அதுவும் உங்களின் வழக்கமான மாதவிடாய் காட்டிலும் மிகவும் குறைவான இரத்தப்போக்கு ஏற்படும்.அப்படி இருந்தாலும் அதனை அலட்சியமாக நினைக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்..

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories