Friday, July 11, 2025
Homeவிவசாயம்பீகாரில் அதிசயம் நிகழ்த்தும் விவசாயி! ஒரே மரத்தில் பூக்கள், காய்கள் மற்றும் கனிகள்..!

பீகாரில் அதிசயம் நிகழ்த்தும் விவசாயி! ஒரே மரத்தில் பூக்கள், காய்கள் மற்றும் கனிகள்..!

Date:

- Advertisement -

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு மட்டும் என்றுமே மவுசு குறையாது. பொதுவாக மாம்பழங்கள் பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று. இதனால் நம்மில் பெரும்பாலானோர் வருஷம் முழுவதும் இந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால்இந்த மாம்பழம் ஒரு பருவ கால பழமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே மா மரங்கள் விளைச்சலைத் கொடுக்கும். கோடை மாதங்களையே மாம்பழ சீசன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி வருஷம் முழுவதும் மாம்பழங்களை சாகுபடி செய்து சாதித்து காட்டியுள்ளார். அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Miracle farmer in Bihar!

பீகாரில் இருக்கும் தர்பங்கா நகரத்தைச் சேர்ந்த விவசாயியான அகிலேஷ் சவுத்ரி, தனது பழத் தோட்டத்தில் பல வகையான மாமரங்களை வைத்துள்ளார். அவை வருடம் முழுவதும் காய்த்து கொண்டிருக்குமாம். இதில் மிகவும் சுவாரசியம் நிறைந்த விஷயம் என்னவென்றால், இந்த மரங்களில் ஒரே சமயத்தில் பூக்கள் ஒரு பகுதியிலும், மாங்காய்கள் ஒருபகுதியிலும், பழுத்த மாம்பழங்கள் ஒரு பகுதியிலும் இருக்குமாம். இதுபோன்ற டஜன் கணக்கில் மரங்கள் அவருடைய தோட்டத்தில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் அவை மகசூலை தருகின்றன.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?

இது போன்ற மாமரங்களை நாம் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. பொதுவாக நாம் பார்க்கும் மரங்கள் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கோடை காலங்களில் மட்டுமே பழங்களை கொடுக்கும். ஆனால் இந்த தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. மேலும் அகிலேஷ் சவுத்ரி தனது தோட்டத்தில் வருடம் முழுவதும் பழங்களை கொடுக்கும் மரங்களை வளர்த்து வருகிறார். இதற்காக அவர் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார். இதனால் அப்பகுதியில் சில மாதங்களை தவிர்த்து வருடத்தின் ஒவ்வொரு சீசனிலும் மாம்பழங்கள் கிடைக்கிறது. அந்த மாதங்களில் மாம்பழங்கள் பழுத்ததும் மரங்கள் உடனடியாக பூ பூக்க ஆரம்பித்து விடுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Miracle farmer in Bihar!1
Miracle farmer in Bihar! | Miracle farmer in Bihar!

அகிலேஷ் தோட்டத்தில் கிடைக்கும் மாங்காய் மற்றும் மாம்பழ வகைகள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வகை மாம்பழங்கள் மிகவும் சுவை உள்ளதாக இருப்பதால், அவற்றை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள், மாங்காய்கள் மற்றும் மாம்பழங்களை நம்மால் பார்க்க முடியும். இந்த மரங்கள் முஜாஹ்பூர் மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்பட்டது என்றும், ஒவ்வொரு மாங்காயின் எடை 500 கிராம் முதல் இருக்கும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் இருக்கும் விவசாயிகள் இங்கு விளையவே விளையாது என்று சொல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தொடர்ந்து விளைவித்து வருவது சந்தோஷம் கொடுப்பதாகவே இருக்கிறது. அண்மையில் கூட ஒரு விவசாயி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழங்களை உடுப்பியில் சாகுபடி செய்து சாதித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் ஒன்றை மட்டுமே புறிந்து கொள்ள வேண்டும். முடியாது என்று ஒன்றும் கிடையாது. சற்று முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்

Miracle farmer in Bihar!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories