Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!

தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!

Date:

- Advertisement -

Watermelon seed : தர்பூசணி நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பழமாகும். இதில் பொட்டாசியம், லைகோபீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. தர்பூசணி விதைகளால் நம்முடைய உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி பார்ப்போம்,

Watermelon seed
Watermelon seed

Watermelon seed Benefits

கோடைக்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய தர்பூசணி பழம் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் 92 சதவீதம் வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது. தர்பூசணி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளதால் உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தானது இதய ஆரோக்கியத்தை பலபடுத்தி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தர்பூசணியில் இருக்கும் விதைகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

தர்பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் நேரங்களில் வறுத்து சாப்பிடலாம். மற்ற நொறுக்குத் தின்பண்டங்களை ஒப்பிடும்போது தர்பூசணி விதையில் நம்முடைய உடலுக்கு அதிகமான மினரல்களும் மற்றும் வைட்டமின்களும் கிடைக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watermelon seed
Watermelon seed

உடல் எடை குறைய : தர்பூசணி விதைகளில் குறைவான கலோரிகள் உள்ளதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி சாப்பிடலாம்.

இரத்த சர்க்கரை அளவு குறைய: இதில் இருக்கும் மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கப் உதவுகிறது. ஒரு கைப்பிடி அளவுள்ள தர்பூசணி விதையினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து 15 நிமிட நேரம் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி சூடு குறைந்ததும் 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க: தர்பூசணி விதைகளில் இரும்புச் சத்து மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்பட: தர்பூசணி விதையில் மோனோ அன்சாச்சுரேட், பாலி அன்சாச்சுரேட் மற்றும் ஃபேட்டிக் அமிலங்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • நரம்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் அதிகப்படியான சோர்வை போக்கி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
  • தர்பூசணி விதைகயில்இருக்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தைத் தடுக்கிறது.
  • வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.
  • தர்பூசணி விதையின் எண்ணையை தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடி வளர்ச்சியானது அதிகரிக்கிறது.
  • தர்பூசணியின் விதைகள் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.
  • வைட்டமின் பி 9 அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். இதனால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories