மாலைநேரத்தில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு அவர்களின் பசியைப் நீக்கும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் பண்ணி கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பால் பணியாரம் பண்ணி கொடுங்கள். அதுவும் இந்த பால் பணியாரத்தை ஒரு கப் கோதுமை மாவை வைத்து செய்யலாம். இந்த பால் பணியாரம் செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
உங்களுக்கு பால் பணியாரம் எப்படி தயார் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பணியாரம் ரெசிபியின் சுலபமான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து ருசித்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்

தேவையான பொருட்கள்: Paal Paniyaram Recipe In Tamil
- கோதுமை மாவு – 1 கப்
- ரவை – 1/4 கப்
- சர்க்கரை பொடி – 1/4 கப்
- ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- சோடா உப்பு – 1 சிட்டிகை
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
பால் செய்வதற்கு…
- காய்ச்சிய பால் – 3/4 லிட்டர்
- சர்க்கரை – 1/4 கப்
- முந்திரி – 5
- ஏலக்காய் – 2
- நீர் – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு போண்டா மாவு பதத்திற்கு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து, மூடி வைத்து அதனை 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதற்குள் பாலை ரெடி பண்ணி கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் முந்திரி, ஏலக்காயை போட்டு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பால் 3/4 லிட்டரை ஊற்றி, பின் அதில் அரைத்த பாதாம் விழுதை மற்றும் சர்க்கரை சேர்த்து, 1/2 லிட்டராகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, அதை மூடி வைக்க வேண்டும். பின் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து, அதில் 1 சிட்டிகை சோடா உப்பை போட்டு அதை நன்றாக கைகளால் பிசைய வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு பிசைந்த மாவை கையில் எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போடவும், அதை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பின் பொரித்ததை பாலில் போட்டு, 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் பரிமாறினால், சுவையான பால் பணியாரம் ரெடி. இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?