Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஆரோக்கியமான சத்துகள் கொண்ட சுவையான முடக்கத்தான் ஊத்தாப்பம் செய்வது எப்படி?

Mudakathan uthappam : தென்னிந்தியாவை பொறுத்தவரையில் தோசை மற்றும் இட்லி இவற்றை தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக்கொண்டால் ஊத்தாப்பம், பேப்பர் ரோஸ்ட்…

Mudakathan uthappam : தென்னிந்தியாவை பொறுத்தவரையில் தோசை மற்றும் இட்லி இவற்றை தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக்கொண்டால் ஊத்தாப்பம், பேப்பர் ரோஸ்ட் தோசை, கீரை தோசை, வெங்காய ஊத்தாப்பம், பன்னீர் தோசை, கேரட் தோசை, மசாலா தோசை, புதினா தோசை, வெங்காய தோசை மற்றும் மல்லி தோசை என இதில் பலவகைகளில் செய்யும் தோசைகள் இருக்கிறது. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே வகையான தோசை செய்து சாப்பிட்டு சலித்திருக்கலாம். அதனால் சற்று வித்தியாசமான முறையில் ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்.

தினந்தோறும் இட்லி, பொங்கல், தோசை என்று திரும்ப திரும்ப அதையே சாப்பிடுகிறீர்களா? கவலை பட வேண்டாம். சத்தும், ருசியும் கொண்ட உணவு முடக்கத்தான் ஊத்தாப்பம். ஆகவே எல்லோருக்கும் ஊத்தாப்பம் மிகவும் பிடிக்கும். அதுவும் ஊத்தாப்பத்தை கடைகளில் வாங்கி சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த காலங்களில் பாட்டி சுடும் ஊத்தாப்பம் தனி ருசியானது. இப்போது அதுமாதிரி செய்ய ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை பார்த்து தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற உணவை கண்டுபிடித்துள்ளார்கள்.

Mudakathan uthappam
Mudakathan uthappam

நமது தென்னிந்திய உணவு வகைகளில் புரதம் நிறைந்த, கொழுப்பு குறைந்த உணவுகள் அதிகமாக இருக்கிறது. அதில் ஒன்று ஊத்தாப்பம். புரதம் நிறைந்த உணவை சாப்பிடும் போது உங்களுக்கு மன நிறைவாக சாப்பிட்டது போல் இருக்கும். உடல் எடையும் அதிகரிக்காது. இந்த முடக்கத்தான் ஊத்தாப்பத்திற்கு கொத்தமல்லி சட்னி போட்டு சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டாக இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், குழந்தைகள் திடமாக இருக்கும். அதே நேரம் அவர்களுக்கு பிடித்த உணவாகவும் இருக்கும்.

Equipment : Mudakathan uthappam

  • 1 தோசை கல்
  • 1 பவுல்
  • 1 மிக்ஸி

Read Also : ருசியாக நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: Mudakathan uthappam

  • 1 கப் தோசை மாவு
  • 2 டீ ஸ்பூன் தயிர்
  • 2 டீ ஸ்பூன் ரவா
  • 1 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கப் முடக்கத்தான் கீரை
  • 4 பல் பூண்டு
  • 1 டீ ஸ்பூன் சீரகம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கை பிடி கொத்தமல்லி, கருவேப்பிலை
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் (தேவையான அளவு)
  • உப்பு ( தேவையான அளவு )

செய்முறை:

முதலில் தோசை மாவில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். வெங்காயத்தை நன்றாக கழுவி அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும், கேரட்டினையும் துருவி வைத்து கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் முடக்கத்தான் இலையை போட்டு அதனுடன் பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு நாம் அரைத்த கலவையை தோசை மாவோடு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.

மீண்டும் தோசை மாவில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நேரம் அப்படியே வைக்கவும். பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து, கல் சூடானதும் மாவை நன்றாக கலந்து ஊத்தாப்பம் போல் ஊத்தவும்

Read Also : கொத்தமல்லி இலையை தண்ணீரில் குடிப்பதன் நன்மைகள்..

அதில் நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட்,கொத்தமல்லி தூவி ஊத்தாப்பம் சுட்டு எடுக்கவும். ஆரோக்கியமான மற்றும் ருசியான முடக்கத்தான் ஊத்தாப்பம் தயார்.

Nutrition:

Serving: 400g | Carbohydrates: 3g | Sodium: 79mg | Fiber: 2g | Calories: 20kcal | Protein: 4g | Potassium: 58mg | Iron: 2.71mg | Calcium: 66mg | Vitamin A: 37IU | Vitamin C: 28.1mg

Related Latest News