Thursday, July 10, 2025
Homeஸ்நாக்ஸ்ஆரோக்கியம் நிறைந்த கருப்பு லட்டு செய்முறை

ஆரோக்கியம் நிறைந்த கருப்பு லட்டு செய்முறை

Date:

- Advertisement -

அன்றைய காலத்தில் நம்முடைய சமையல் அறையே வைத்திய அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி பண்ணுவதற்கு வேண்டிய பொருட்கள் சமையல் அறையிலேயே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை காட்டிலும் மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக பயன்படுத்தி கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் நிஜ்ஜயமாக நீங்காது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

மேலும் இந்த மருந்துகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு பக்கவிளைவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் போக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியம் கொண்ட உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து தந்தாலும் அதை குழந்தைகள் விரும்பி உட்கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து தரக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பற்றிய பகுதியில் பார்க்கப் போகிறோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Black Latte Recipe
Black Latte Recipe

இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவாகும். ஸ்கின் பளபளப்பாகும். முடி தொடர்பான எல்லா பிரச்சினைகளும் நீங்கும். ஹார்ட் ஆரோக்கியமாக செயல்படும். உடல் வெயிட் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லட்டுவை சாப்பிடுவதால் விரைவிலேயே உடல் எடை குறைய தொடங்கும். இவ்வளவு அற்புத பலன்கள் நிறைத்த இந்த லட்டுவை நாம் வீட்டில் எப்படி தயார் பண்ணுவது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கருப்பு எள் – ஒரு கப்
  • ஆளி விதை – ஒரு கப்
  • கசகசா – 1/4 கப்
  • பூசணி விதை – 1/4 கப்
  • வெல்லம் – 1 1/2 கப்
  • ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
  • நெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதற்கு இரும்பு கடாயை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றால் சாதாரண கடாயை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்ததாக கருப்பு எள்ளை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி சுத்தமாக அலசி நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அடுப்பில் கடாயை வைத்து வடிகட்டி வைத்துள்ள கருப்பு எள்ளை அந்த கடாயில் போட்டு எள் பொரியும் வரை குறைந்த தீ வைத்து நன்றாக வறுக்க வேண்டும். எள் பொரிய தொடங்கியதும் அதை ஒரு அகலமான தட்டில் கொட்டி சூடு இல்லாமல் ஆரவைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் இதே கடாயை அடுப்பில் வைத்து ஆளி விதையை போட்டு நன்கு அது பொரியும் படி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் எள்ளுடன் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக பூசணி விதையையும் அடுப்பில் சேர்த்து அது நன்றாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அந்த பூசணி விதையையும் ஆளி விதையுடன் போட்டுக்கொள்ள வேண்டும். இறுதியாக கசகசாவை அடுப்பில் போட்டு குறைவான தீயை வைத்து நன்றாக சிவக்கும் வரை வறுத்தெடுக்க கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதையும் கொட்டி சூடாக இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?

இப்பொழுது இவை எல்லாம் நன்றாக சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஆற வைத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கொட்டி அரைத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்று இரண்டாக அரைபட்டதும் இதனுடன் பொடித்து வைத்துள்ள வெல்லத்தையும் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி இதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் உருக்கிய நெய் கலந்து நன்றாக கிண்டி விட வேண்டும். பிறகு இதை உருண்டை பிடித்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு லட்டு தயாராகிவிட்டது.

மிகவும் எளிமையான பொருட்களாக இருந்தாலும் இந்த பொருட்கள் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பதால் வீட்டில் இந்த கருப்பு லட்டு தயார் செய்து பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories