Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரியுமா.?

How to keep betel in pooja : பொதுவாக எந்தவொரு சுப நிகழ்ச்சி மற்றும் அசுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் முதலில் வைக்கப்படுவது வெற்றிலை, பாக்கு..…

How to keep betel in pooja : பொதுவாக எந்தவொரு சுப நிகழ்ச்சி மற்றும் அசுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் முதலில் வைக்கப்படுவது வெற்றிலை, பாக்கு.. பூஜை சாமான் வாங்கும்போது மற்ற சாமான்களை வாங்குவதற்கு மறந்தாலும் வெற்றிலை பாக்கு என்பதை மறக்காமல் முதலில் வெற்றிலை பாக்கு கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு வெற்றிலை பாக்கு பூஜைக்கு மிகவும் முக்கிய பொருளாக இருக்கிறது.

How to keep betel in pooja
How to keep betel in pooja

அப்படி முக்கியத்துவம் நிறைந்த வெற்றிலையை பூஜையில் எப்படி வைத்து படைக்க வேண்டும் என்பது பலபேருக்கு குழப்பமாக இருக்கிறது. ஆகையால், உங்கள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் இப்பதிவு உங்களுக்கு அமையும். அதாவது, பூஜையில் வெற்றிலை பாக்கு எப்படி வைத்து படைக்க வேண்டும் என்ற முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

பூஜையில் வெற்றிலை வைக்கும் முறை: How to keep betel in pooja

பூஜையில் வெற்றிலையை, கடவுளை பார்த்தபடி வைக்க வேண்டும். அதாவது, கடவுளுக்கு வாழை இலையை எப்படி வைப்பீர்களோ அதேமாதிரி தான் வெற்றிலையும் படைக்க வேண்டும். அதாவது, வெற்றிலையின் நுனிப்பகுதியானது தெற்கு பார்த்தவாறு இருக்கக்கூடாது.

பூஜையில் வெற்றிலையை வைக்கும்போது 4 வெற்றிலையையும் 2 பாக்கினையும் வைப்பது மிகவும் நல்லது. அல்லது 2 வெற்றிலையும் வைக்கலாம். அப்படி நீங்கள் 4 லுக்கும் மேலாக வெற்றிலை வைக்க விரும்பினால் வெற்றிலை கவுளியாக வைக்கவும். அதுவே நீங்கள் துக்க காரியத்திற்கு வெற்றிலையை பயன்படுத்தும் போது 1 வெற்றிலை 1 பாக்கு மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இதுவே வழக்கம்.

ஆன்மீகத்தின் முறைப்படி, இந்த வெற்றிலை பாக்கில் முப்பெரும் தேவிகளும் குடிகொண்டுள்ளார்கள். அதாவது, வெற்றிலையில் பார்வதி,சரஸ்வதி, மஹாலக்ஷ்மி இருக்கிறார்கள். முப்பெரும் தேவிகள் இருக்கும் எல்லா இடங்களிலும் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். ஆகையால், எல்லா தெய்வங்களின் ஆசிர்வாதத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்று விரும்பினால் எப்போதும் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுங்கள்.

Read Also: அனிதா என்னும் பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா?

தேங்காய் வைக்கும் முறை:

பூஜையில் தேங்காய் உடைத்து வைக்கும்போது, தேங்காயின் மேல்பகுதி (கண் உள்ள பகுதி) கடவுளுக்கு வலது புறமும், தேங்காயின் அடிப்பகுதி கடவுளுக்கு இடது புறமும் வைக்க வேண்டும்.

தண்ணீர் வைக்கும் முறை:

பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அப்படி நீங்கள் நாள்தோறும் விளகேற்றி வழிப்படும்போது அந்த தண்ணீரை எடுத்து செடிகளில் ஊற்றி மீண்டும் பஞ்ச பாத்திரம் முழுவதும் நிரம்பி இருக்கும் படி நிரப்பி வைக்க வேண்டும்.