Thursday, July 10, 2025
Homeசைவம்Ragi Kali | கேழ்வரவு மாவில் ருசியான களி செஞ்சி பாருங்க! Easy

Ragi Kali | கேழ்வரவு மாவில் ருசியான களி செஞ்சி பாருங்க! Easy

Date:

- Advertisement -

Ragi Kali : நமது பாரம்பரிய உணவில் மிகமிக முக்கியமானது கேப்பகளி, தினந்தோறும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தனர். அதனால்தான் அவர்கள் அதிக வயதுடன் நல்ல ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50வயதில் செய்த வேலையை இன்றுள்ள தலைமுறையினரால் 20 வயதில் செய்ய முடிவதில்லை. அந்த அளவிற்கு இது போன்ற உணவுகள் அவர்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தது.

ஆனால் இன்றைய தலைமுறையினர் உடம்பிற்கு தீமை விளைவிக்கும் பல உணவுகளை உண்ணுகிறார்கள். எனவே இவற்றை தவிர்த்து விட்டு குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள். இப்பொழுது இருப்பவர்கள் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய முறையில் இந்த கேழ்வரகு களியை செய்வது பற்றி இந்த பதிவில் வாயிலாக தெரிந்து கொள்ளப்போகிறோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

tasty ragi kali recipe in tamil
tasty ragi kali recipe in tamil

இயற்கையாகவே கேழ்வரகில் இரும்பு சத்து இருக்கிறது. இதை உண்பதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த மிகவும் உதவுகிறது. கேழ்வரகு சாப்பிடுவதால் உடலை ஓய்வு பெற செய்ய உதவும். மேலும் இது மனஅழுத்தம், தூக்கமின்மை மற்றும் கவலைகளை போக்க உதவுகிறது.

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது கேழ்வரகு சேர்த்த உணவுகளை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் நம் உடலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும். இதை கேப்பைக்களி, கேழ்வரகு களி என்று எந்த பெயர் வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இதற்கு தொட்டுகொள்ள அசைவ கிரேவி, சைவ கிரேவி அல்லது குருமா இவற்றில் இவற்றில் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கேழ்வரகு களி செய்முறை | Ragi Kali Recipe In Tamil

Equipment

1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1கப் கேழ்வரகு மாவு
  • 1டீஸ்பூன் உளுந்து
  • 1டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1டீஸ்பூன் கடுகு
  • 3டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 3காய்ந்த மிளகாய்
  • தேவையான உப்பு
  • தேவையான கறிவேப்பிலை

செய்முறை

அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தாளிக்க வைத்திருக்கும் பொருள்களை கொண்டு தாளிக்கவும், பின்பு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு கொதி வரும் வரைக்கும் மூடி வைக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கொதி வந்த பிறகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கொண்டே விடாமல் ,கட்டி வராதவாறு கிண்டி கொண்டே இருக்கவும். மாவு கட்டி இல்லாமல் இருக்க விஷ்க் பயன்படுத்தலாம்.

எல்லாமாவையும் கொட்டிய பின்பு தீயை மிதமாக வைத்து கெட்டியாக வரும் வரை விடாமல் கிண்ட வேண்டும். நன்றாக வெந்தவுடன் இறக்கிவிட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதற்கு தேங்காய் சட்னி ,கருவாட்டு குழம்பு ,மீன்குழம்பு போட்டு சாப்பிடலாம்.

மேலும் இது போன்று பார்லி ,ஓட்ஸ் கம்பூ போன்ற தானிய மாவிலும் களி செய்யலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nutrition Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதனையும் படியுங்கள் : முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்.. இளமையான சரும அழகை மெருகேற்ற இதை செய்யுங்க போதும்..!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories