Friday, July 11, 2025
Homeசமையல் டிப்ஸ்சமையல் குறிப்பு – 5

சமையல் குறிப்பு – 5

Date:

- Advertisement -

Samayal Tips Part 5 : வெண்ணை காய்ச்சி இறக்குவதற்கு முன் கொஞ்சம் வெல்லம் போட்டு இறக்கவும். நெய் அதிக வாசனையுடன், ருசியாகவும் இருக்கும்.

பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் கடலை மாவினை கலந்தால் ருசியாகவும் மொரமொரவென்றும் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பருப்பு வேகவைக்கும் போது உப்பு போட்டால், பருப்பு வேக அதிக நேரம் ஆகும்.

Samayal Tips Part 5
Samayal Tips Part 5

தயிர் அதிக நேரம் புளிப்பு ஏறாமல் இருக்க இஞ்சி தோலை அகற்றிவிட்டு இஞ்சியை கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்காது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

பாத்திரத்தில் அடிபிடித்தால் வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைத்து பிறகு பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரம் அடிபிடித்தது சுத்தமாகிவிடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜவ்வரிசி கஞ்சியில் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் குளிர்ச்சியாக பாயசம் மாதிரி இருக்கும்.

நல்ல மண் சட்டியில் மீன் குழம்பு செய்தால் 2 தினங்கள் குழம்பு வீணாகாமல் மணமாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கொஞ்சம் எண்ணையை முட்டை மேல் தடவி வைத்தால் முட்டை கெடாமல் இருக்கும்.

பருப்பு பொடியுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்பு கூட்டு கெட்டியாக வரும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக்கி வதக்கி அதனுடன் சேர்த்தால் சுவை அதிகமாகும். எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தி செய்தால் கெட்டுவிடாமல் இருக்கும்.

இதையும் படிங்க : எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் இதை மட்டும் ஒருமுறை செய்தால் உடனடியாக நீங்கிடும்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories