Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Home Remedy For Mealybugs on Hibiscus | செம்பருத்தி செடியில் இருக்கும் மாவு பூச்சியை முற்றிலும் அழிக்க மைதா மாவு போதும் …!

Home Remedy For Mealybugs on Hibiscus : கிழக்கு ஆசியாவில் தோன்றியது செம்பருத்தி தாவரமாகும்.இந்த செம்பருத்தி செடியின் பூவானது மருத்துவ குணம் கொண்டது.மேலும் மலேசிய நாட்டிற்கு…

Home Remedy For Mealybugs on Hibiscus : கிழக்கு ஆசியாவில் தோன்றியது செம்பருத்தி தாவரமாகும்.இந்த செம்பருத்தி செடியின் பூவானது மருத்துவ குணம் கொண்டது.மேலும் மலேசிய நாட்டிற்கு செம்பருத்தி பூவானது தேசிய மலராகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் செம்பருத்தி செடியை அழகின் காரணமாகவும், மருத்துவ குணம் கொண்டதாலும் வளர்க்கிறார்கள்.

Home Remedy For Mealybugs on Hibiscus
Home Remedy For Mealybugs on Hibiscus

முக்கியமாக அழகு தாவரமாக இச்செடியை ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படுகிறது. ஆனால் இந்த செடியை மாவு பூச்சி நோய் வந்து தாக்குவதால் இதன் வளர்ச்சி குறைந்து அழிந்துவிடுகிறது. ஆகவே இந்த பதிவில் செம்பருத்தி செடியில் வரும் பூச்சியை அழித்து ஆரோக்கிமாக வளர்ப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

Home Remedy For Mealybugs on Hibiscus

மைதா மாவு கரைசல்:

முதலில் 100 கிராம் மைதா மாவினை எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளுங்கள். பின்பு இதனை கட்டியில்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு இந்த தண்ணீரை வெயில் அடிக்கும் போது செம்பருத்தி செடியின் மேல் வேகமாக தெளிக்கவும். முக்கியமாக அதிகமாக பூச்சி உள்ள இடத்தில தெளிக்கவும்.

இவ்வாறு செய்வதால் பூச்சியின் மேல் மைதா மாவு,படிந்து பசைபோல் ஒட்டிக்கொள்ளும். இதனால் செடியில் உள்ள மாவு பூச்சி அனைத்தும் இறந்துவிடும்.

Read Also : இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறலாம் …

பழைய சாதம் கரைசல்:

மாவுப்பூச்சியை அழிக்க மற்றொரு நல்ல வழி பழைய சோற்று கரைசலை தெளித்து விடுதல் ஆகும். அதாவது, பழைய சாதத்தை ஒரு மூடிய டப்பாவில் போட்டு ஒரு வாரம் நொதிக்க வையுங்கள். அதன் பின் இதனை கூழாக கரைத்து நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவேண்டும்.

பின்னர் இந்த கரைசலுடன் 5 மடங்கு தண்ணீர் ஊற்றி செம்பருத்தி தாவரத்தின் மீது இருக்கிற மாவு பூச்சியின் மீது தெளித்து விடுங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் மாவு பூச்சிகள் இறந்து அழிந்து விடும்.

Watch Video : உங்களுக்கு 40 வயதை தாண்டி விட்டதா