Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு குறிப்புகள் இருக்கிறது.. இதோ இதை முயற்சி செய்யுங்கள்..!

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு குறிப்புகள் இருக்கிறது.. இதோ இதை முயற்சி செய்யுங்கள்..!

Date:

- Advertisement -

அழகு என்பதில் எப்போதும் வேறுபாடுகள் இருப்பதில்லை என்பதுதான் நிஜம். எவ்வாறு ஒரு பெண் தன்னை அழகுபடுத்தி கொள்கிறாளோ, அதே போலதான் ஒரு ஆணும் அழகுபடுத்தி கொள்ளலாம். அனைத்திலும் சமத்துவம் என்று பேசும் நாம் ஏன் இதில் மட்டும் பேசுவதில்லை..? பெண் மட்டும்தான் அழகுபடுத்த வேண்டும் என்கிற பேச்சுகள் அனைத்தும் மலையேறி போய் விட்டது. இன்று ஆண்களும் தங்கள் முகத்தை அழகுபடுத்த நினைக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் போலவே ஆண்களும் தங்கள் அழகில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அழகாக இருக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளையும் கடைபிடித்து வருகின்றனர். எனவே அது போல் உள்ளவர்களுக்கு கட்டாயம் சில அழகு குறிப்புகள் தேவை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

beauty tips for men (1)
beauty tips for men

ஆண்களுக்கு பயன்படும் எளிமையான அழகு குறிப்புகள் இதோ

ஆண்களின் முகத்தில் முகப்பரு உண்டாகலாம். அல்லது அவர்கள் இன்னும் கவர்ச்சியான ஸ்கின் பராமரிப்பு செய்ய ஆசைப்படலாம். அதனால் பெண்களுக்கு மாத்திரம் அழகு குறிப்புகள் இல்லை.. ஆண்களுக்கும் அழகு குறிப்புகள் இருக்கின்றன. இப்போது அந்த குறிப்புகள் என்னென்ன? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம் வாங்க…

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆண்கள் தங்கள் SKIN னை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

ஆண்கள் தங்கள் தோல்களை சுத்தம் செய்ய சில நுட்பங்களை தெறிந்திருக்க வேண்டும். பொதுவாக பெரும்பாலான ஆண்களுக்கு ஆயில் பசை மற்றும் ஆயில் சருமம் இருக்கும். காரணம் அவர்களின் முகத்தில் திறந்த துளைகள் இருக்கிறது. ஆண்கள் வெளியில் நீண்ட நேரம் செலவிடுவதால், தூசி மற்றும் அழுக்குகள் முகத்தின் துளைகளில் படிந்து முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உருவாக வழி செய்கிறது.எனவே ஆண்களின் முகத்தை சுத்தப்படுத்த ரசாயனம் இல்லாத அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது நல்லது. அத்தகைய தயாரிப்புகளுக்கு, சிறந்த பிராண்டுகளின் நீண்ட கால கிரீம்களை தேர்வு பண்ண வேண்டும். வீடு திரும்பியதும் தினமும் முகத்தை இளநீரில் கழுவி, க்ளென்சர் தடவி கொள்வது மிகவும் நல்லது.

beauty tips for men (2)
beauty tips for men

ஆண்களுக்கு ஃபேஷியல்: beauty tips for men

  1. ரசாயனங்கள் குறைந்த அளவு உள்ள ஃபேஸ் வாஷ் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது உங்கள் முகத்தை ஃபேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்தி கழுவவும்.
  3. பெருஞ்சீரகம் பொருட்கள் அல்லது டியோடரண்டுகள் சம்பந்தமான பொருட்களை முகத்தில் பயன்படுத்த கூடாது.
  4. ஆண்களின் ஸ்கின் குறிப்பாக கரடுமுரடு கொண்டதாக இருக்கும், எனவே அவர்கள் வைட்டமின் E தயாரிப்புகள் அல்லது கற்றாழை போன்ற ஃபேஸ் வாஷ்களால் ஸ்கின் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  5. ஷேவிங் செய்த பின் கற்றாழை ஃபேஸ் வாஷ் ஷேவிங் செய்யும் போது உண்டாகும் சிறிய வெட்டுக்களால் தோன்றும் அடையாளங்களை நீக்கும்.
  6. உதடுகளில் அடிக்கடி லிப் பாம் அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது..
  7. முகம் மிகவும் கரடுமுரடாக இருந்தால், ​​பார்லருக்கு போய் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் செயல் முறையினை 1அல்லது 2 முறை பின்பற்றவும்.
  8. இந்த சிறிய முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்தால், முகத்தில் வரும் முகப்பரு, துளைகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து, முக தோலை அழகாவும், கவர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்..

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories