Friday, July 11, 2025
Homeஅசைவம்எளிமையான மற்றும் சுவையுள்ள தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இது போல செய்து பாருங்கள்...

எளிமையான மற்றும் சுவையுள்ள தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இது போல செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள். இதன் சுவை அந்த அளவிற்கு இருக்கும்!!

Date:

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே, பலருக்கும் ஜாலியாகவே இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்சது போல சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா சுவச்சு சாப்பிடலாம். இந்த சன்டேவில பொறுமையா சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்து இருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு தக்காளி சிக்கன் கறி சமைத்து சாப்பிடுங்களேன்.

tomato chicken curry recipe in tamil
tomato chicken curry recipe in tamil

சிக்கன் கறியை எப்படி சமையல் செய்தாலும் அந்த குழம்புக்கு உள்ள சுவை வந்துவிடும்.ஆனால் அதை முறையாக செய்தால் எப்படி இருக்கும். அப்படியான சுவையுள்ள ரெசிபி தான் இது. சிக்கனில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் உள்ளிட்ட பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதுவரை தக்காளியில் சிக்கன் சமையல் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? முயற்சி செய்து பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முக்கியமாக சிக்கன் மசாலா தயார் செய்வது மிக எளிது.இந்த தக்காளி சிக்கன் கறி சாதம், சப்பாத்தி இவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வண்ணம் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி சிக்கன் கறி இது போல ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், இதை அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தோஷம் விலக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பகுதியில் வைக்கக்கூடாது..!!

Equipment | tomato chicken curry recipe in tamil

1 பவுள்
1 கடாய்
1 மிக்ஸி

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1/4 கி தக்காளி
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்
  • 1 டேபிள் டேபிள் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1/4 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் ஃக்ரீம்

செய்முறை | tomato chicken curry recipe in tamil

முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் ஒரு பவுளில் தயிர், கடுகு எண்ணெய், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஊற வைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து சுண்ட செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின் அதே கடாயில் வெங்காயம், தக்காளி, பட்டை, பட்டர், லவங்கம்,முந்திரி, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

tomato chicken curry recipe in tamil

இவை சூடு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அரைத்து வைத்து இருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன்பிறகு சிக்கனை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு நீர் மற்றும் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.

ஒரு கொதி வந்ததும் கஸ்தூரி மேத்தி மற்ற ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சிக்கன் கறி ரெடி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : மாலை நேர ஸ்நாக்ஸ் சுவையான கொண்டை கடலை கட்லெட் இதை செய்து பாருங்களேன்!!!

Nutrition | tomato chicken curry recipe in tamil

Serving: 750g | Calories: 93kcal | Carbohydrates: 5.52g | Protein: 9.4g | Fat: 2.79g | Potassium: 95mg | Sodium: 88mg | Calcium: 24mg | Fiber: 6.4g | Vitamin A: 27IU | Vitamin C: 606mg | Iron: 7.1mg

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories