Thursday, July 10, 2025
Homeசைவம்How to make delicious wedding ghee rice? | சுவையான திருமண வீட்டு நெய்...

How to make delicious wedding ghee rice? | சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ? – 6

Date:

- Advertisement -

How to make delicious wedding ghee rice?: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று பட்டியல் போட்டு பார்த்தால் அதில் கட்டாயம் நெய் சோறு இடம்பிடித்திருக்கும்.இந்த நெய் சாதம் பெரியவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும் பெரும்பாலான நபர்களுக்கும் மிகவும் பிடித்த உணவாக நெய் சாதம் இருக்கும்.ஆனால் நம் வீட்டில் நெய் சாதம் செய்தால் இது சரியில்லை,அது சரியில்லை குற்றம் சொல்வார்கள்.

How to make delicious wedding ghee rice?
How to make delicious wedding ghee rice?

Equipment

  • 1 பிரஷர் குக்கர்
  • 1 பவுல்

தேவையான மூலப்பொருள்

  • 5 TBSP நெய்
  • 2 PIECE பட்டை
  • 6 PIECE லவங்கம்
  • 2 PIECE அண்ணாச்சி பூ
  • 4 PIECE ஏலக்காய்
  • 1 TBSP கடல் பாசி
  • 2 LEAF பிரியாணி இலை
  • 1 TBSP முந்திரி பருப்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 5 PIECE பச்சைமிளகாய்
  • 1 TBSP இஞ்சி,பூண்டு விழுது
  • 2 கப் பாசுமதி அரிசி ஊற வைத்து கொள்ளவும்
  • புதினா சிறிதளவு
  • உப்பு

செய்முறை | How to make delicious wedding ghee rice?

முதலில் ஒரு குக்கரில் 5 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளவும்.அந்த நெய்யை சூடாக்கவும், நெய் சூடானவுடன். அதனுடன் லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல் பாசி, அண்ணாச்சி பூ, முந்திரி பருப்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும், அதிகமாக வறுக்காமல் மிதமான அளவிற்கு வதக்கி கொள்ளவும். பிறகு மிதமான அளவில் வதக்கியவுடன், நாம் வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கவும். அந்த வெங்காயத்தை பொன்னிறமாக வரும்வரை வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?

பொன்னிறமாக வெங்காயம் வந்தவுடன், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். நாம் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நெய் சாதத்தை நன்றாக கிண்டி விடவும், பின்பு எவ்வளவு அரிசி சேர்த்தீர்களோ அதற்கு சமமாக தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதனுடன் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள புதினாவையும் சேர்த்து கொள்ளவும்.பிறகு அதை நன்றாக கிளறி விடவும். அதன்பின் குக்கரின் மூடியை மூடிவிட்டு ஒரு விசில் சத்தம் வரும் வரை காத்திருக்கவும். ஒரு விசில் வந்ததும் பிரஷரை இறக்கி குக்கரின் மூடியை எடுத்து அதில் உள்ள நெய் சாதத்தை வேறு பாத்திரத்தில் மாற்றவும். இப்பொழுது கல்யாண வீட்டு சுவையுடன் கூடிய நெய் சாப்பாடு தயாராகி விட்டது.

Watch Video also : உருளை கிழங்கினை வேகவைத்தால் வெடிக்கும் அப்படி வெடிக்காமல் இருக்க!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nutrition(ஊட்டச்சத்து )

Serving: 4PERSON | Carbohydrates: 46g | Calories: 210kcal | Fat: 11g| Protein: 5g| Trans Fat: 0.7g

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories