Double Whorl : பொதுவாக இரட்டை சுழி பலருக்கு இருக்காது. எங்கோ யாருக்கோதான் அது இருக்கும்.அந்த வகையில் NHGRI ஆய்வின்படி உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் தான் இரட்டை சுழி இருக்கிறதாம்.
Double Whorl : இரட்டை சுழி தலையில் இருந்தால் என்ன அர்த்தம்
பொதுவாக ஆண்களுக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால் அவர்களை உடனே கிண்டல், கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் அதுபோல் இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று, கிராமங்களில் சொல்வதை அதிகமாக கேட்க முடியும். ஆனால் அது உண்மையா அல்லது இதற்கு பின் வேறுகாரணங்கள் அதாவது அறிவியல் காரணங்கள் இருக்கிறதா என்பதை பற்றி இந்த பதிவில் காணப்போகிறோம்.

இப்படி பொதுவாக பலருக்கு இரட்டை சுழி இருக்காது. எங்கோ யாருக்கோ இருக்கும் இருக்கும். அந்த வகையில் NHGRI ஆய்வுகளின் படி உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்குத்தான் இந்த இரட்டை சுழி இருக்கிறதாம்.
ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது என்றால் அறிவியலின் உண்மை படி மரபணுதான் முக்கிய காரணம் அவர்களுடைய முன்னோர்கள் தாத்தா, பாட்டி இவர்களுக்கு இருந்து இருந்தால் இப்படி இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம்.
இப்படி இரட்டை சுழி உள்ளவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதல் திருமணம் நிச்சயம் செய்து ஏதோகாரணகளால் அது நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்படலாம். இதற்கு இந்த இரட்டை சுழியே காரணம் என்று கிராமப்புறங்களில் பேசுவதை காணலாம். ஆனால் இவ்வாறுகூறுவதை யாராலும் இன்று வரை எவ்விதத்திலும் நிரூபித்த உண்மைகளோ தகவல்களோ இல்லை.
ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது என்றால், ஜோதிடத்தின்படி அவர்கள் பொறுமையானவர், எதையும் பேசுபவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர்,ஒருவருக்கு கஷ்ட நஷ்டங்களில் முதலில் நிற்பவர் என்ற குணங்களுடன் இருப்பார்கள். மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |