Road shop style egg masala in spicy taste : ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசி எடுத்து சாப்பிடுவது என்பதை வழக்கமாக வைத்திருப்போம்..!
ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பேல் பூரி, பானிபூரி, காளான், மசாலா பூரி, சிக்கன் பக்கோடா என்று எந்தவகையாக இருந்தாலும் நாம் கடைகளில் சுவைத்து சாப்பிடுவோம் அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அதில் உள்ள ருசியானது அவ்வளவு அருமையாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து தந்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்து கொடுக்கும் உணவுப்பொருட்களை காட்டிலும் வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் ரொம்பவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் உள்ள முட்டை மசாலாவின் ருசியானது மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த முட்டை மசாலாவை ரோட்டு கடையின் ருசியிலேயே வீட்டில் எப்படி சமைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு ஊரிலும் புகழ் பெற்ற உணவுகள் பல இருக்கிறது. அந்த வகையில் நாம் மும்பை நகரின் பிரசத்தி வாய்ந்த ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண பெற்ற மும்பை ரோட்டுக்கடை உணவுகளில் ஒன்றான முட்டை மசாலாவை இங்கு நாம் பார்க்க போகிறோம். இது வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. இந்த ரெசிபியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவையானது இருக்கும்.சுவையான முட்டை மசாலாவை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எவ்வாறு செய்வதென்பதை பற்றி பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?
Street Food முட்டை மசாலா | Road shop style egg masala in spicy taste
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா டீஸ்பூன் டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- எண்ணெய் தேவையான அளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
முதலில் முட்டையை வேக வைத்து அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி, பூண்டு, மல்லி இலை இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் மற்றும் கரம் மசாலத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி நறுக்கி வைத்து உள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் தண்ணீர் வற்றியதும் நறுக்கிய மல்லி இலை அதில் தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை மசாலா ரெடி. இந்த முட்டை மசாலா ரோட்டு கடைகளில் கிடைக்கும் பிரெட், சப்பாத்தி மற்றும் கலந்த சாதத்துடனும் ருசிக்கலாம்.
Nutrition
Serving: 300g | Vitamin A: 200IU | Vitamin C: 15mg | Calcium: 24mg | Iron: 9.1mg | Calories: 67kcal | Carbohydrates: 6g | Protein: 6.64g | Fat: 4.5g | Sodium: 130mg | Potassium: 128mg | Fiber: 5.4g |
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!