Why February 14th is Valentine’s Day : ஏன் நாம் ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் ஆக கொண்டாடுகிறோம் என்பது பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகளை இதில் தெரிந்திக்கொள்வோம்.
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் காதல் தினத்தை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். நாம் ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடுகிறோம், அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் பற்றிய தகவல்களை இதில் தெரிந்திக்கொள்வோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கிற காதலர்கள் ஏற்கனவே தங்களின் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்
தங்களின் கிரஷ்கள், காதலர்கள், இணையர்களுக்கு எது போன்ற பரிசு கொடுக்க வேண்டும், காதலர் தினத்தை எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டு தயார் ஆகி இருப்பார்கள். சிலர் காதலர் தினத்தை ஒரு சுய-காதல் தினமாக குறிப்பிட்டு, சுய-கவனிப்பில் ஈடுபடுவதன் மூலமோ அல்லது தாங்கள் விரும்பும் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமோ தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நீங்கள் தனிமையில் இருந்தாலும் இல்லை என்றாலும், காதலர் தினம் என்றால் காதலில் இருப்பதும், காதலைக் கொண்டாடுவதும் தான்.
ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் : Why February 14th is Valentine’s Day
வேலன்டைன்ஸ் டே என்ற தினம் புனித வேலன்டைன்ஸ் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான லுபேர்களியா பிப்ரவரி மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படும். வசந்த காலத்தை வரவேற்பதற்காகவும் திருமணமான ஜோடிகள் தங்களுக்கு குழந்தை தரிக்கவும் கொண்டாடும் பண்டிகை இது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிப்ரவரி மாதம் அப்பொழுது ஒரு காதல் மாதமாக கடைபிடிக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் போப் முதலாம் கேளாசியஸ் இதற்கு வேலண்டைன்ஸ் டே என்று பெயர் மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
மற்றொரு வரலாறோ, ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்று வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் கல்யாணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ள தடை விதித்துள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : உங்கள யாரையாவது சனியனேனு திட்டுனா அவர்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?
இந்த சூழலில் தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்திருக்கிறார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரிந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது ஞாபகமாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அன்பை வெளிப்படுத்தும் நாள்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் அனைத்தும் மிகவும் ஸ்பெஷலான ஒன்று, இருவரும் அன்பு, காதல், பரிசு போன்ற எல்லாவற்றையும் பரிமாறிக்கொள்வதோடு மட்டுமின்றி அது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் தருணமாக அமைந்துவிடும்.
மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்துகிற நாளான இந்த தினத்தில் வாழ்கை துணையாக வர விரும்புபவர்களோடு வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க விரும்பும் மனப்பூர்வமான வாக்குறுதிகளை காதலர்கள் அளிக்கின்றனர்.நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்கள் அனைவரும் இந்த காதல் தினத்தை கொண்டாடலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
