Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் உடல் வலி உண்டாகுமா..?

பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் உடல் வலி உண்டாகுமா..?

Date:

- Advertisement -

மன அழுத்தமானது நமது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாக இறுக்கிறது மற்றும் அது நமது உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பலர் குறிப்பாக பெண்கள் அதிகப்படியான மன அழுத்தத்தின் போது உடல்வலியை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் பெண்களுக்கு வரும் மன அழுத்தம் மற்றும் உடல் வலிக்கு மத்தியில் நேரடி தொடர்பு உள்ளதா? இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தம் என்பது உடலியல் சார்ந்த விளைவுகளை தூண்டுவதன் காரணமாக அட்ரினலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் தசை பதற்றத்தை உண்டு செய்து, அதனால் தசை இறுக்கம் மேலும் அசௌகரியத்தை உருவாக்குகிறது. கூடுதலாக மன அழுத்தமானது வலியை தாங்கும் அளவை குறைத்து விடுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

stress body pain reason women
stress body pain reason women

stress body pain reason women

பெண்களில் மன அழுத்தம் மூலமாக ஏற்படக்கூடிய உடல் வலியானது குறிப்பாக கழுத்து, தோள்பட்டை மற்றும் கீழ் முதுகு ஆகிய பகுதிகளில் பொதுவாக காணப்படுகிறது. இந்த பகுதிகள் அடிக்கடி இறுக்கம் மற்றும் பதற்றத்திற்கு ஆளாக கூடியவை என்பதால் மன அழுத்தம் உண்டாகும் பொழுது அவை மேலும் மோசம் ஆகிறது. கூடுதலாக மன அழுத்தம் காரணமாக வரும் தசை பதற்றமானது ஒற்றை தலைவலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தலாம் என்றும், அசௌகரியத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நாள்பட்ட மன அழுத்தமானது உடல் வலியை உண்டாக்கக்கூடிய ஃபைப்ரோ மையால்ஜியா மற்றும் டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலிகளை மோசமாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இதுபோன்ற நிலைகளை நிறைய அனுபவிப்பதாக தெரிய வந்துள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தாய் ஐஸ் டீ யை எப்படி செய்வது?

அது மட்டுமல்லாமல் மன அழுத்தமானது தூக்கத்தை பாதிப்பதன் காரணமாக உடல் வலிக்கு மறைமுகமாக பங்களிக்கலாம். மன அழுத்தத்தினால் ஒருவரால் சரியாக தூங்க முடியாத நிலை வரும்பொழுது, அதனால் தசை பதற்றம் மற்றும் வலி கூடுதலாகிறது. மேலும் அசௌகரியம் மற்றும் மன அழுத்தம் இன்னும் மோசமாகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெண்களுக்கு வரக்கூடிய உடல் வலிக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றாலும், அதுவும் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது என்று சொல்வதை மறுக்க முடியாது. ஆகவே மன அழுத்தத்தை குறைக்க மன அழுத்த குறைப்பு நுட்பங்கள், உடற்பயிற்சி மற்றும் நண்பர்கள், குடும்பம் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெருவது நல்லது. இதன் காரணமாக மன அழுத்தம் மூலமாக உண்டாகும் உடல் வலியில் இருந்து நாம் விடுபடலாம்.

இதையும் படிங்க : பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories