Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Do you know about Keeripillai : உங்களுக்கு கீரிப்பிள்ளை பற்றி தெரியுமா.?

Do you know about Keeripillai : இந்த உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விலங்கை பிடிக்கும். சில பேர் அவர்கள் வீட்டில் அவர்களுக்கு பிடித்த…

Do you know about Keeripillai : இந்த உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விலங்கை பிடிக்கும். சில பேர் அவர்கள் வீட்டில் அவர்களுக்கு பிடித்த விலங்குகளை வளர்ப்பார்கள். விலங்குகளுக்கு தேவையான உணவுகள் போன்றவற்றை பார்த்து பார்த்து வாங்கி வைப்பார்கள். ஆனால் அந்த விலங்குகளை பற்றி தெறிந்திருக்க மாட்டார்கள். அதாவது அந்த விலங்குக்கு வேறு பெயர்கள் இருக்கிறதா, அதனுடைய வாழ்நாள் போன்றவை அறிந்திருக்க மாட்டார்கள். நம் பதிவில் நாள்தோறும் தோறும் விலங்குகளை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கீரிப்பிள்ளையை பற்றி தெறிந்து கொள்வோம் வாங்க..

Do you know about Keeripillai
Do you know about Keeripillai

Do you know about Keeripillai

Mongoose என்பது ஆங்கிலத்தில் அழைக்கும் பெயராக இருக்கிறது. இதனை தமிழ் பெயர் கீரிப்பிள்ளை என்று அழைப்பார்கள். கீரி பாலூட்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிபிள்ளைகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்த கீரிப்பிள்ளைகளில் 34 வகைகள் இருக்கிறது. இந்த கிரிபிள்ளையின் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் நீங்கலாக ) இருக்கிறது, 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளது. சில வகைகளைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில வகைகள் குழுவாக வாழ்ந்து இரையைப் பகிர்ந்துண்டு வாழ்கின்றன.

ஒரு குழுவில் 20 கீரிகள் இருந்தாலும் இதனை தலைமை ஏற்று வழி நடத்துவது ஆண் கீறி பிள்ளையாக தான் இருக்கும்.

Read Also : உங்கள் சருமம் அழகு பெற அருமையான அழகு தகவல்கள்!

பெண் கீரிப்பிள்ளையின் கர்ப்ப காலம் 60 தினங்கள் முதல் 70 தினங்களாக இருக்கும். புதிதாக பிறந்த கீறி பிள்ளைகள் கரையான் புற்றில் 4 வாரங்கள் வரை வசிக்கும். ஒரு பிரசவத்தில் 1முதல் 6 குட்டிகள் வரை ஈன்றெடுக்க கூடியது.

கீரிகளுக்கு எந்த வகையிலிருந்து ஆபத்து வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. கழுகுகள், காட்டு நாய்கள், சிறுத்தை, நிலத்தில் வாழும் ஹார்ன்பில் உள்ளிட்டவை ஆபத்தை ஏற்படுத்த கூடியது.

கீரிப்பிள்ளைகள் உணவாக புழுக்கள், பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறிணிகள் இவைகளை சாப்பிடும். ஆனால் இவற்றுக்கு பாம்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாகிவிடும். பாம்பு எப்படி தான் படம் எடுத்தாலும் கீரிப்பிள்ளைகள் பாம்பை விட்டு விடுவதில்லை.

இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பு போன்ற பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொல்லும் ஆற்றல் கொண்டவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் சக்தியும் பாம்புகளை எதிர்க்க உதவுகிறது. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கின்ற திறனைக் கொடுக்கிறது.