9 Foods You Shouldnt Combine With Milk : ஒரு சில உணவினை பிற உணவோடு சாப்பிடுவதை ஆயுர்வேதம் மறுக்கிறது. பாலுடன் புளிப்பான பழங்கள், வாழைப்பழம், உப்பு, மீன் மற்றும் வேறுசில பழங்களையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக ஆரோக்கியமான உணவு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இவற்றை சில உணவோடு சேர்த்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கிய கேடு ஏற்படுத்தலாம். ஒரு சில உணவினை பிற உணவோடு சேர்த்து கலந்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் எதிர்க்கின்றது. இந்த பாரம்பரிய மருத்துவ முறையின் படி பாலுடன் புளிப்புள்ள பழங்கள், வாழைப்பழம், மீன், உப்பு மற்றும் வேறு சில பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. எனவே இந்த பதிவில் பாலுடன் இணைத்து உண்ணக்கூடாத உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
Must Read : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்
9 Foods You Shouldnt Combine With Milk
மீன்கள்
மீன்களை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் நச்சுத்தன்மைஉண்டாக்கும், என்று ஆயுர்வேதம் சொல்கிறது.மேலும் ஒரு சில தோல் பிரச்சனைகள் வராமல் தவிர்ப்பதற்கும் மீனை பாலுடன் ஒருபோதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சிட்ரஸ் பழ ஸ்மூத்திகள்
பொதுவாக ஸ்மூத்திகள் சாப்பிடுவது சுவையாக இருக்கும்.அதேநேரம் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சேர்ப்பதற்கான ஒரு ஆரோக்கிய கருதப்படுகின்றது. ஆனால் ஆயுர்வேததின் படி சிட்ரஸ் பழங்களையும் பாலையும், சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிட்ரஸ் பழத்தில் இருக்கிற புளிப்பு தன்மை பாலை திரிந்து போகச் செய்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஈஸ்ட் பிரட்
பாலுடன் ஈஸ்ட் பிரட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தோஷங்களின் சமநிலையை மற்றும் அசௌகரியம் ஏற்படுத்தலாம்.
வாழைப்பழங்கள்
பால் மற்றும் வாழைப்பழம் இந்த இரண்டையும் மிகவும் விரும்பக்கூடிய ஒன்று என்றுதான் சொல்லவேண்டும்.பலர் ஸ்மூத்திகள் அல்லது வாழைப்பழ மில்க் ஷேக் இவற்றை உணவாக சாப்பிட விரும்புவார்கள்.ஆனால் இதை உண்ணுவதால் மூக்கடைப்பு மற்றும் சளி ஏற்படுத்தலாம்.
அதனால் இந்த காம்பினேஷனை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மெலான்
பாலுடன் மெலான் பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.இந்த இரண்டு வகை பொருட்களுக்கும் வெவ்வேறு செரிமான நேரம் இருப்பதால் இது ஏற்படுகிறது.
முள்ளங்கி
முள்ளங்கி சாப்பிட்ட உடன் பால் குடிப்பதால் உங்களுக்கு செரிமான ஆரோக்கியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் பாலின் செரிமானத்தை முழங்கி தடுக்கிறது.
மாமிசம்
பாலுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடக்கூடாது.ஏனெனில் இதனால் வயிற்று வலி, வாயுத்தொல்லை, குமட்டல் , அசிடிட்டி போன்ற ஒரு சில செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இறைச்சி மற்றும் பால் எதிரெதிரான தன்மைகளை கொண்டு உள்ளதால் இந்த பிரச்சனைகள் நிகழ்கிறது.
Must Watch : பெண்கள் பூ வைப்பது பற்றி அறிய வேண்டியவை..!
பச்சை இலை காய்கறிகள்
பச்சை நிற உணவுகளை இரவு உணவாக சாப்பிட்ட பின் பால் குடிப்பதை தவிர்க்கவும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானத்தை பாதித்து, குடல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
உப்பு
உப்பினை பாலுடன் கலந்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் முற்றிலுமாக தவிர்க்கிறது. ஏனெனில் இது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.