Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்வீட்டுக் குறிப்புகள்தோஷம் விலக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பகுதியில் வைக்கக்கூடாது..!!

தோஷம் விலக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பகுதியில் வைக்கக்கூடாது..!!

Date:

- Advertisement -

Vastu Tips for Plants and Trees in Tamil: வீட்டில் தோட்டம் வைக்கும் அளவிற்கு இடம் இல்லை என்றாலும் சின்ன சின்ன தொட்டிகளில் பல வகையான செடிகளை வைத்து அதை பராமரித்து அதில் பூக்கும் பூக்களை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வீட்டில் எந்த இடத்தில் எந்த செடியை வைத்து வளர்க்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமானது.

Vastu Tips for Plants and Trees in Tamil
Vastu Tips for Plants and Trees in Tamil

Vastu Tips for Plants and Trees in Tamil

மனை தோஷத்தை நீக்கும் செடிகள்

நம் முன்னோர்கள் எந்த செயலையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள் என்று நாம் அறிந்ததே. அந்த வகையில், வீட்டின் முன்பகுதியில் அதாவது வாசல் பகுதியில் மல்லி, முல்லை, ஜாதி மல்லி இது போன்ற பூக்களின் செடிகளை வளர்த்து வந்தார்கள். இந்த பூ செடிகளை வீட்டின் முன் பகுதியில் வளர்த்தது வெறுமனே அழகுக்காகவோ அல்லது வாசனைக்காகவோ மட்டுமல்ல. பொதுவாக, பாரிஜாதம், மல்லி, தும்பை, சாமந்தி, ஜாதி மல்லி, முல்லை, பாதிரி மலர் இது போன்ற பூக்கள் விநாயகருக்கு மிகவும் உகந்தவை. எனவே, இந்த செடிகளை வளர்ப்பதால் வீட்டில் ஏதேனும் மனை தோஷங்கள் இருந்தாலும் சரியாகிவிடும். எனவே, இவற்றை வீட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

வேப்ப மரம் வளர்க்கலாமா?

வேப்ப மரம் அம்மனுக்கு பிடித்த மரம். எனவே வீட்டின் எந்த ஒரு பகுதியிலும் வேப்பமரத்தை வளர்க்கலாம். ஆனால், நன்றாக வளர்ந்து வரும் மரத்தை வெட்டிவிட்டால் அந்த வீட்டில் ஆரோக்கியம், சந்தோசம், ஒற்றுமை எல்லாம் கெட்டு விடும். எனவே, வேப்பமரத்தை எக்காரணத்தை கொண்டும் வெட்டிவிடாதீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒற்றை வாழை மரத்தை வளர்க்க கூடாது

சந்ததியை வாழையடி வாழையாக தழைக்க செய்யும்,வீட்டில் வாழை மரத்தை வளர்ப்பது அவ்வளவு நல்லது. ஆனால், ஒற்றை வாழை மரத்தை வளர்க்ககூடாது. சிறு குருத்தாவது அதன் அருகில் துணையாக நட்டு வைக்க வேண்டும். ஏனென்றால், மறு கன்று இல்லாத அல்லது துணை இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இல்லாமல் போகும் என்று சொல்வார்கள்.

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

துர்பாக்கியத்தை தரும் மரங்கள்

மா மரம் மற்றும் முருங்கை மரம் இரண்டையும் வீட்டின் வாசலுக்கு நேராக, குறிப்பாக நிலக்கதவிற்கு நேர் எதிராக வளர்க்கவே கூடாது. அதாவது, நீங்க நிலகதவை திறந்தால் அந்த மரம் தெரியும்படி இருக்கக் கூடாது. அது துர்பாக்கியத்தை கொடுக்கும் என்று சொல்வார்கள். எனவே, வீட்டின் பின்புற இடங்களில் வளர்த்துக் கொள்ளலாம்.

அதேப்போல், வீட்டில் ஒற்றை தென்னை மரத்தை வளர்க்க கூடாது. எப்போதுமே மற்றொரு கன்றோடு சேர்த்து வளர்க்க வேண்டும். இதையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரோஜா செடியை வீட்டின் முன் பகுதியில் வளர்க்கலாமா?

வாஸ்து சாஸ்த்திரத்தில் முட்கள் இருக்கும் செடிகளை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது என்று கூறப்படுகிறது. அதனால், தான் நம் முன்னோர்கள் வாசலுக்கு நேராகவோ அல்லது வீட்டின் முன் பகுதியிலோ ரோஜா செடிகளை வளர்க்க மாட்டார்கள். ரோஜாவும் மிக அழகாக பூத்துக் குலுங்கும் மலர் தானே என்றாலும், அந்த ரோஜா செடிகளும் முட்களை கொண்டிருக்கின்றன அல்லவா?

இது தெரியாமல் நாம் விதவிதமாக ரோஜா செடிகளை வாங்கி வீட்டின் வாயில் பகுதியில் வைத்து வளர்த்து வருக்கிறோம். ரோஜா செடிகளை வளர்க்கலாம் தவறில்லை; ஆனால் வீட்டின் பக்கச்சுவர் பகுதிகள் அல்லது மாடியில் அல்லது மாடிப்படியில் வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இனி இது போல கடைப்பிடியுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories