Vijay Car : தளபதி விஜய் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி எம் டபிள்யூ 5 சீரிஸ் காரில் தன்னுடைய தயாரிப்பாளர் குடும்ப திருமண விழாவிற்கு வந்திறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த காரை இந்தியாவில் வெகு சிலரே வைத்துள்ளார்கள். அதில் நடிகர் தளபதி விஜய்யும் ஒருவர் இதைப்பற்றிய விவரங்களை விரிவாக காணலாம்.
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே மிக பெரிய அளவில் ஹிட்டான நிலையில் இவருக்கென்று திரைத்துறையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவர் பின்னால் கோடிக்கணக்கான ரசிககர்களின் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இவர் அரசியலுக்கு நுழைவதற்கு பல்வேறு நகர்வுகளை செய்துகொண்டுள்ளார். இதனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தளபதி விஜய் இருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் மகனுக்கு நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு சினிமா திரைவுலகப்பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அந்தவகையில் நடிகர் விஜய்யும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சீரியலில் இருந்து விலக காரணம் என்ன? பிரதீப்பா மீண்டும் கங்காவா நடிப்பாரா?
இந்த திருமணத்திற்கு வந்திருந்த நடிகர் விஜய் தன்னுடைய பி எம் டபிள்யூ 5 சீரிஸ் 530டி எம் ஸ்போர்ட் காரில் வந்திறங்கினார். இவர் அந்த காரில் இறங்கியது வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vijay Car : காரே இல்ல பி எம் டபிள்யூ தேர் !
நடிகர் விஜய் இந்த திருமண நிகழ்விற்காக வந்த கார் குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தன்னிடம் உள்ள பி எம் டபிள்யூ 5சீரிஸ் 530காரில் தான் சென்னை நகரத்தில் பயணம் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துகிறார். சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து கிளம்பி செல்வதற்காக விமானநிலையம் வரும்போது இந்த காரில்தான் வந்தார். அப்பொழுதும் இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது.
தற்போது திரைப்பட தயாரிப்பாளர் லலித் மகனுடைய திருமணத்திற்கு இந்த காரில் விஜய் வந்த செய்தியும் மிகவும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த பி எம் டபிள்யூ 530டி எம் ஸ்போர்ட் காரை பொறுத்தவரை பி எம் டபிள்யூ நிறுவனத்தினுடைய சிறந்த காராக இருக்கிறது. இந்தக் காரில் 2993சிசி 6சிலிண்டர் இன்லைன் 4வால்வு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது .இது 3லி பி 57டர்போசார்ஜர் ஐ 6இன்ஜினாக உள்ளது. இந்த இன்ஜினுடன் 8ஸ்பீடு கியர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த இன்ஜினானது அதிகபட்சமாக 261பி எச் பி பவரையும் 620என் எம் டார்க் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை கொண்டு இந்த காரானது அதிகபட்சமாக 250கி.மீ வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது, மேலும் 0முதல் 5.7 நொடியில் பிக்கப் செய்யும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரானது ஒரு லிட்டருக்கு 17.4கி .மீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் ஏகப்பட்டது அமைத்துள்ளது. டிரைவர் இந்த காரை 80கி ,மீ வேகத்திற்கு ஓட்டினால் ஒரு முறை பீப் சத்தம் கேட்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தொடர்ந்து காரின் அதிகரித்து 120கி.மீ வேகத்திற்கு மேல் போகும் போது தொடர்ந்து பீப் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் டிரைவர் சுதாரித்து கொண்டு காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இது மிகமிக முக்கிமான பாதுகாப்பு அம்சமாகும்.

இதுமட்டுமல்லாமல் இந்த காரில் எமர்ஜென்சி பிரேக் லைட் பிளாசிங், பின்பக்கம் 3 பாயின்ட் சீட் பெல்ட், பின்பக்கம் அமரும் பயணிக்கான ஹெட் ரெஸ்ட், சைல்டு சீட் ஆங்கர் பாயிண்டுகள், டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம் சீட் பெல்ட் வார்னிங் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் இந்த கார் யூரோ என்கேப் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. ஆகவே இந்த கார் இந்தியாவில் உள்ள
பாதுகாப்பான கார்களில் இதுவும் முக்கிய ஒன்றாக உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Read : உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா?
இது போக இந்த கார்களின் பிரேக்கிங்கை பொறுத்தவரை இ பி டி உடன் ஏ பி எஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் சிஸ்டம், இ எஸ் பி உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் அமைந்துள்ளது. எந்த அளவிற்கு பாதுகாப்பான காரோ அந்த அளவிற்கு சொகுசு அம்சங்களும் நிறைந்த காராக இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த காரணங்களுக்காகவே சினிமா பிரபலங்கள் இந்த காரினை பயன்படுத்தி வருகின்றனர். இக் காரில் நான்கு ஸோன் கொண்ட ஆட்டோமேட்டிக் ஏ சி ,கேபினிலிருந்து பூட் பகுதியை ஆக்சஸ் செய்து கொள்ளும் வசதி, 360டிகிரி கேமரா, ஸ்டேரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட், பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு இல்லை, கடைசியாக 75லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இந்த காரை நடிகர் விஜய் கடந்த 2020ஆம் வருடம் வாங்கிவிட்டார் இவர் 3 ஆண்டுகளாக இந்த காரைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார். இவர் வைத்திருக்கும் கார் கார்பன் மெட்டாலிக் நிறை பி எம் டபிள்யூ 5சீரியஸ் காராகும் இந்த காரானது ஆல்பைன் ஒயிட் கலரிலும் கிடைக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Watch : ஏர் இந்தியா வாங்கி இருக்கும் புதிய விமானம்!
வி தமிழ் நியூஸ் கருத்து : நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் பி எம் டபிள்யூ 5சீரியஸ் எம் 530டி டி எம் ஸ்போர்ட் கார் தற்போது விற்பது நிறுத்தப்பட்டாலும் இன்றைய அளவும் இந்த காரினை திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த கார்களுக்கு கிரேஸ் இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நடிகர் விஜயிடம் இந்த கார் மட்டுமல்ல ரோல்ஸ்ராய்ஸ் போன்ற ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கிறது. ஆனால் அவர் இந்த காரில் தான் அடிக்கடி சென்னையில் பயணம் செய்துவருகிறார். இவர் ரசிகர்கள் இவரை விட இவரது காரை பலர் அதிகம் ரசிக்க துவங்கிவிட்டனர்.