Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்வீட்டுக் குறிப்புகள்நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களை எத்தனை தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களை எத்தனை தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

Date:

- Advertisement -

தினமும் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை குறிப்பிட்ட தினங்களுக்குள் மாற்ற வேண்டும். சமையல் பொருட்கள், மாத்திரை, ஆயின்மெண்ட்களுக்கு அவற்றின் கவர்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், காலணிகள், பல் துலக்கும் பிரஷ் போன்றவற்றில் காலாவதி தேதி இருக்காது. அதுபோன்ற பொருட்களை எத்தனை தினங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பதை பற்றிதான் இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ள போகிறோம் வாங்க..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

household things replace regularly (1)
household things replace regularly (1)

பல் துலக்கும் பிரஷ்

தினமும் நாம் உபயோகப்படுத்தும் பல் துலக்கும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவது சிறந்தது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். ஆனால், அது வளைந்து தேய்ந்து இருந்தால் உடனே மாற்றிவிட வேண்டும். 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டாம்.

செருப்பு

சிலர் ஒரே செருப்பை அடிப்பகுதி தேய்ந்துபோனாலும் 2அல்லது 3 வருடங்களுக்குப் பயன்படுத்துவர். ஆனால், அது மிக மிக தவறு. நல்ல தரமான செருப்புகள் ஒரு ஆண்டு வரை வரும். வேலைக்கு செல்பவர் அல்லது தினமும் செருப்பு அணிந்து கொண்டு நடப்பவராக இருந்தால் ஒரு ஆண்டு வரை உழைக்கும். அதிகமாக வெளியில் செல்லாதவர் எனில் 2 ஆண்டுகள் வரலாம். செருப்பின் அடிப்பகுதி தேய தொடங்கினால் அவற்றை மாற்றி விட வேண்டும். இல்லையென்றால் பாத வலி, மூட்டு வலி அனைத்தும் வரக்கூடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

தலையணை உறை, மெத்தை விரிப்பு, துண்டு,போர்வை,

தலையணை உறைகளை 4 நாட்களுக்கு ஒரு முறையும், மெத்தை விரிப்பு, போர்வையை வாரம் ஒரு முறையும் அவசியம் மாற்றி கொள்ள வேண்டும். துண்டுகளை 3 நாட்களுக்கு ஒரு முறை துவைத்துப் பயன்படுத்துவது சிறந்தது. படுக்கைகள் மற்றும் படுக்கைகளில் இருக்கும் அலங்காரங்கள் உட்பட தலையணைகள், காலப்போக்கில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த சரும செல்களை சேகரிக்கின்றன, அவை ஒவ்வாமையை விளைவிக்கலாம் அல்லது மோசமாக்கலாம் மற்றும் பிரேக் அவுட்டை ஊக்குவிக்கலாம். தலையணைகள் தூசி மற்றும் பூச்சிகளைக் கொண்டிருக்கலாம் , இது வருடம் முழுவதும் ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்கும். ஒவ்வொரு 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் தலையணைகளை மாற்ற வேண்டுமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

household things replace regularly (2)
household things replace regularly (2)

உள்ளாடைகள்

நல்ல தரமான உள்ளாடைகளாக இருந்தாலும், தினந்தோறும் பயன்படுத்துவதால் அவற்றை 8 முதல் 9 மாதங்களுக்குள் மாற்றி விட வேண்டியது நல்லது. அவை உடுத்துவதற்கு மென்மையானதாக இருப்பது அவசியம்.

பிளாஸ்டிக் பாட்டில்கள்

பஸ், ரயில்களில் பயணம் செய்யும் போதும் விருந்து விசேஷங்களின் போதும் தரப்படும் பாட்டில்களை ஒரு முறை பயன்படுத்தி உடனே அதை நசுக்கி குப்பையில் போட வேண்டும். மற்ற பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். சில சமயங்களில் ஒரு ஆண்டு முடிவதற்கு முன்பாகவே அதனுடைய நிறம் மங்கத்தொடங்கி விடும். அப்போது அந்த பாட்டில்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பாத்திரம் தேய்க்கும் பிரஷ்

15 நாட்களுக்கு ஒரு முறை பாத்திரம் தேய்க்கும் பிரஷ்களை கட்டாயம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் நீரில் நன்கு கழுவி பிழிந்து வைக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சை நோய் தாக்கும்.

இட்லி மாவு

பெரும்பான்மையான பெண்கள் இட்லி மாவு அரைத்து, ஒரு வாரம், 10 நாளுக்கு பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது மிகத் தவறு. இதனால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும். 3 நாட்களுக்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காய்கறிகள், பழங்கள்

பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்த காய்கறி, பழங்களை 2, 3 நாட்களில் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும். கீரைகளை வாங்கி வந்த தினமே சமைத்து முடிக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் சத்துக்களை இழக்க நேரிடும்.

நான்ஸ்டிக் பான்கள்

நான்ஸ்டிக் பான்கள் எப்பொழுதும் நிலைக்காது. பூச்சு சில்லு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்தால், பான்னை வெளியே தூக்கிப்போட்டு விட்டு புதிதாகத் தொடங்குவதற்கான நேரம் இது என்று பொருள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெட்டு பலகைகள்

ஆழமான பள்ளங்களைஉடைய கட்டிங் போர்டுகளை நன்றாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும், அதாவது பாக்டீரியா, அச்சு மற்றும் வைரஸ்கள் அதில் வளரக்கூடும் இது உணவில் மாசுபடுவதற்கு வழி செய்யும் அல்லது தொற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும். நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கட்டிங் போர்டு குறைந்தது ஒரு ஆண்டாவது நீடிக்கும், மற்றவை மரத்தாலானவை 5வருடம் வரை நீடிக்கும். இருப்பினும், உங்கள் கட்டிங் போர்டில் ஆழமான பள்ளங்கள் இருந்தால், அவற்றை மாற்றக்கூடிய நேரம் இது.

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கட்டிங் போர்டுகளை வெதுவெதுப்பான, சோப்பு நீரில் சுத்தம் செய்யவும், இறைச்சி மற்றும் காய்கறிகளை ஒரே பலகையில் நறுக்குவதைத் தவிர்த்து, ப்ளீச் கரைசலில் சுத்தம் பண்ணுவதன் மூலம் மாசுபடுவதைத் தவிர்க்கலாம்..

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories