Thursday, July 10, 2025
Homeஅசைவம்ருசியாக நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

ருசியாக நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

Date:

- Advertisement -

Delicious ghee chicken : அசைவு உணவுகளில் அனைவருக்கும் சிக்கன் மிகவும் முக்கியமான உணவுகளில் ஒன்று.வார இறுதியில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவினை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு நெய் சிக்கன் வறுவல் அசைவ உணவை ஒரு முறையாவது சமைத்து அதன் சுவையை பாருங்களேன்.

இதை செய்வதற்கு நாம் சேர்க்கும் மசாலாவானது அப்படியே நம்மை சாப்பிட தூண்டும் வகையில் நறுமணத்தையும், நல்ல நிறத்தையும் உண்டாக்கும். இந்த அசைவ சிக்கன் உணவு காரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரில் இந்த நெய் வறுவல் சிக்கன் மிகவும் பிரபலமானது. இதை மிகவும் எளிமையாக செய்து விடலாம். இதனுடைய காரத்தை மனதில் வைத்துக்கொண்டு, இந்த உணவினை பக்க உணவாக சாப்பிட்டால் நல்லது. இதை தோசை, இட்லிக்கு போட்டு சாப்பிடலாம்.

Delicious ghee chicken | ருசியாக நெய் சிக்கன்

Delicious ghee chicken
Delicious ghee chicken

Read Also : நம் வீட்டில் ரோட்டுக்கடை பேல் பூரியை அதே சுவையில் செய்து பாருங்க! சுவையோ சுவையாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவையான பொருட்கள் ( மசாலா செய்வதற்கு )

  • 15 – சிவப்பு மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1½ டேபிள் ஸ்பூன் வரமல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 4 பல் பூண்டு
  • இஞ்சி சிறிய துண்டு

நெய் சிக்கன் வறுவலை செய்வதற்காக தேவையான பொருட்கள்:

  • 1/2 கிலோ – சிக்கன்
  • 1/4 கப் – நெய்
  • 1/2 கப் – தயிர்
  • 2 – பெரிய வெங்கயாம் (நறுக்கியது )

மசாலா தயார் செய்வது : Delicious ghee chicken

ஒரு கடாயில் சிவப்பு மிளகாய்,மிளகு, வரமல்லி, சோம்பு, சீரகம் போன்றவைகளை சேர்த்து குறைந்த தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரையில் வறுக்கவும்.

வறுத்த பின்பு கொஞ்சநேரம் அதை ஆறவிடவும். பிறகு ஒரு மிக்சியில் இவைகள் அனைத்தையும் போடவும்.அதோடு 4 பல் பூண்டு, சிறிய இஞ்சி துண்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அதனை அரைக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பிறகு அரைத்த மசாலாவினை 1/2 கிலோ சிக்கனில் சேர்க்கவும். பின்பு அதனுடன் 1/2 கப் தயிரை சேர்த்து அதில் உப்பினை தேவையானஅளவு சேர்க்கவும். நன்றாக கலந்து வைத்துள்ள மசாலாவை 30 நிமிடங்கள் பிரிட்ஜில் ஊறவிடவும்.

நெய் சிக்கன் வறுவலை செய்வது:

பிறகு ஒரு கடாயில் 1/4 கப் அளவு நெய்யினை சேர்க்கவும். நெய்யானது சூடானதும் பொடிசெய்துள்ள பெரிய வெங்கயாத்தை அதனுடன் போட்டு தேவையான அளவில் உப்பு சேர்த்து அது பொன்னிறமாகும் வரையில் வதக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அது வதங்கிய பின்பு ஊறவைத்துள்ள சிக்கனை எடுத்து அதில் சேர்த்து வேகவிடவும் ( தண்ணீரினை சேர்க்கவேண்டாம் ) வெந்தபிறகு அதில் சிறிதளவு கருவேப்பிலை போட்டு நன்றாக கிளறவும்.

இப்போது சுவையான நெய் சிக்கன் வருவலானது தயார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nutrition:

Serving: 30g | Carbohydrates: 6g | Calories: 591kcal | Fat: 9g | Protein: 17g |
Fiber: 2g | Sugar: 2g | Sodium: 318mg

Watch Video : இரண்டு லட்சமா 30 செகண்டுக்கு, இப்படி பேசிய ஹீரோ அமலா ஷாஜியை பற்றி தான் !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories