Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஃபேஷன்சன் கிளாஸ் அணிவதால் இத்தனை ஸ்டைல் இருக்கா..? உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய டிப்ஸ்..!

சன் கிளாஸ் அணிவதால் இத்தனை ஸ்டைல் இருக்கா..? உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய டிப்ஸ்..!

Date:

- Advertisement -

Is wearing sunglasses so stylish : வெயில் என்ற பருவகால நிலை மாறி மாறி வந்தாலும், வெய்யிலின் தாக்கம் இன்னும் குறையவே இல்லை! சாதாரணமாகவே வெளியே பயணமானால், பலருக்கும் சன் கிளாஸ் அணியும் பழக்கம் உள்ளது.

Is wearing sunglasses so stylish
Is wearing sunglasses so stylish

இந்த ஆண்டு கோடைக்கு, குளிர் கண்ணாடிபோடாமல் சென்றால், கண்கள் பாதிப்பது போல அவ்வளவு வெயில்! ஒரு பக்கம் பாதுகாப்பு, ஒரு பக்கம் ஸ்டைல் ஸ்டேட்மென்ட். வெயில் மட்டுமல்லாமல், சன்கிளாஸ் அணிந்து கொள்வது ஒரு ஸ்டைலாகவே கருதப்படுகிறது. விதவிதமான ஆடைகள், டிரெண்டிங் ஃபேஷன் போல, ஹாட்டான டிரெண்டில் சன்கிளாஸ்களும் சேரும்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Is wearing sunglasses so stylish
Is wearing sunglasses so stylish

Is wearing sunglasses so stylish

பெரிய அளவில், முகத்தையே மறைக்க கூடிய அளவு ஃபிரேம் உள்ள கண்ணாடிகள் முதல், மினிமலிஸ்ட் டிசைன்கள் வரை, பல டிசைன்கள் இருக்கிறது. ஃபேஷனில் அவ்வபோது புதுசு புதுசாக அறிமுகமாகிற பாலிவுட் நட்சத்திரங்களின் ஹாட்டான சன்கிளாஸ் கலெக்‌ஷன்ஸ்குறித்து இங்கே பார்க்கலாம்.

ஓவர்சைஸ் ரெக்டாங்கில் சன்கிளாஸ்

பார்த்தவுடன் பளிச்சென்ற ஈர்க்கும் வகையில், நேர்த்தியாக, ரெட்ரோ ஸ்டைல் கண்ணாடி என்றால், ஓவர்சைஸ் செவ்வக கண்ணாடிகளைத் தேர்வு செய்யலாம். மேலே இருக்கும் படத்தில் நாகினி புகழ் மௌனி ராய், இவ்வகை சன்கிளாஸ் போட்டு கொண்டு தன்னுடைய ஸ்டைலை மேம்படுத்தியுள்ளார். விண்டேஜ் ஸ்டைல் என்று கூரும் பழைய காலத்து ஸ்டைல் மறு பிறவி எடுத்து மறுபடியும் வருகின்றன, அதில் சன்கிளாஸ் ஸ்டைலும் வருகிறது!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மாஸ்க் சன்கிளாஸ்

கிளாரமான, கொஞ்சம் அதிகமான ஸ்டைல் மற்றும் வித்தியாசமான தோற்றத்துக்கு, இந்த மாஸ்க் சன்கிளாஸ் பொருத்தமாக அமையும். ஸ்டைலாகவும் இருக்கும், அதே நேரத்தில் குளிர் கண்ணாடிகளுக்கு உண்டான வேலைகளையும் செய்யும்! அதிகமான வெயிலில் கண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும், பிரைவசியும் வழங்கும்.

Read Also : Nefrosave மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பைலட்-ஃபிரேம் சன்கிளாஸ்

கிளாசிக் ஸ்டைல் சன்கிளாஸ்களில், இந்த நேர்த்தியான, ஸ்டைலான பைலட்-ஃபிரேம் கிளாஸ்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது , பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிந்துள்ள இந்த ஏவியேட்டர் வகை சன்கிளாஸ், பெயருக்கு ஏற்றார் போல 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் விமான ஓட்டுனர்களால் அதிகம் அணியப்பட்டு பிரபலமடைந்தது.

மிரர் ஏவியேட்டர் கிளாசஸ்

இந்த கிளாஸ் ஏவியேட்டர் வகை கிளாஸ்களில் ஒன்று! எப்போதுமே ஹாட்டான ஆடைகளில், குளிர்ச்சியாக தோற்றமளிக்கும் மலாய்க்கா அரோரா, இந்த ஏவியேட்டர் மிரர் கிளாஸ் அணிந்து ஏர்போர்ட்டில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். வழக்கமான சன்கிளாஸ்களை விடவும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும். மேலும், ஸ்லீக்கான மிரர்டு லென்ஸ் பளிச்சென்ற வண்ணங்களில் கிடைக்கின்றன.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வட்ட வடிவ அமைப்பு சன்கிளாஸ்

ஜாலியான, ஸ்டைலான, சார்மிங் தோற்றத்துக்கு, இந்த வட்ட வடிவம் கொண்ட சன்கிளாஸ்கள் அணியலாம். பொதுவாகவே, வட்ட வடிவ கண்ணாடி ஃபிரேம்கள் பலவிதமான வடிவ முகத்துக்கும் பொருந்தும். ஹாலிடே மூடுக்கு பொருத்தமாக அமையும். அதே போல இந்த வகை சன்கிளாஸ்கள் பல வண்ணங்களில் கருப்பு ஃபிறேமுடம் வருகிறது. இது வசதியாகவும் இருக்கிறது.

வெள்ளை கலர் ரிம் உள்ள ரெட்ரோ கிளாஸ்கள்

நீங்கள் தேர்வு செய்யும் சன்கிளாஸ் ஃபிரேமின் கலர் மற்றும் கண்ணாடியின் வடிவம் தான் உங்களுக்கான பிரத்தேக ஸ்டைலைக் தரும். பாலிவுட் திவா அனுஷ்கா ஷர்மா அணிந்திருக்கிற இந்த வெள்ளை கலர் ரிம் ரெட்ரோ சன்கிளாஸ்கள் விண்டேஜ் மற்றும் மாடர்ன் இரண்டும் கலந்த தோற்றத்தை கொடுக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories