Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்

5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்

Date:

- Advertisement -

5 Foods : நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நமக்கு மிகவும் அவசியமாகும்.அதுவும் குறிப்பாக பெண்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்

நமது நாட்டில் பெரும்பாலான பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக அவர்களுக்கு ரத்தசோகை நோய்கள் மேலும் சில நோய்கள் வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமல் தவிர்க்க வேண்டுமென்றால் இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.அதைப்பற்றித்தான் இந்த கட்டுரை விளக்கமாக கூறுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெண்களுக்கு தேவையான இரும்புசத்து உணவுகள் | 5 Foods

நம்முடைய உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிகமிக அவசியமாகும். அதுவும் குறிப்பாக பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேணடும்.ஏனெனில் மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு வெளியேறும் மற்றும் பிரசவம் காரணமாக பெண்களுக்கு இரும்புசத்து குறைபாடு ஏற்படுகிறது.

Must Read : சீரியல் நடிகையை மணம்முடித்த ரெடின் கிங்ஸ்லி … அந்த மணப்பெண் யார் தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உடலில் இரும்பு சத்து குறைபாடுகள் இருந்தால் தலை சுற்றல்,சோர்வு,உடல்பலவீனம், மயக்கம் போன்றவை வரக்கூடும். ஆகையால் உடலில் ரத்தசோகை வராமல் தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கவும் இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். முக்கியமாக பெண்கள் இரும்புச்சத்தினை அதிகரிக்க உதவும் 5 வகையான உணவுகளை பற்றி இப்பகுதியில் பார்க்கப்போகிறோம்.

கீரைகள்

பல மருத்துவ குணங்கள் உள்ள கீரைகளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. மாமிசத்தில் ஹீம் இரும்புசத்து கிடைக்கிறது.அதுவே நான் ஹீம் இரும்புச்சத்துகள் காய்கறிகளில் கிடைக்கிறது. கீரைகளை வைட்டமின் சி அதிகமாக உள்ள குடை மிளகாய் அல்லது சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடும்போது இரும்புச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. குறிப்பாக கீரை ஸ்மூதிஸ்,கீரை சாலட் இவைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பருப்பு வகைகள்

5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்
5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்

பெண்களுக்கு தேவையான இரும்பு சத்து பருப்புகளில் கிடைக்கின்றன.இவற்றில் நான் ஹீம் இரும்புசத்து , நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பருப்பை குழம்பாகவோ, சூப்பாகவோ, சாலட்டோடு சேர்த்தோ சாப்பிடலாம். உணவில் அடிக்கடி பருப்பைசேர்ப்பதால் நம் உடலில் இரும்பு சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Watch Video : பெண்கள் பூ வைப்பது பற்றி அறிய வேண்டியவை..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பூசணி விதைகள்

இரும்பு சத்து பூசணி விதையில் அதிகமாக உள்ளது. இதை ஸ்னாக்ஸாகவோ,சாலட் அல்லது யோகர்ட் உடன் சேர்த்தோ சாப்பிடலாம், மேலும் நம் உடலுக்கு தேவையான மினரல்கள் பூசணி விதையில் உள்ளது.

குயினோவா

குயினோவில் நார்ச்சத்து, புரதம் ஆகியவற்றோடு ஒரு குறிப்பிட்ட அளவு இரும்புச்சத்தும் உள்ளது. பல விதமான சாலட்கள் செய்வதற்கும், காலை உணவாகவும்,சைட் டிஷ் ஆகவும் இருக்கிறது. தாவர அடிப்படையில் ஊட்டச்சத்துக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த உணவாக குயினோவா இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

லீன் இறைச்சிகள்

சிக்கன், மாட்டிறைச்சி, வான்கோழி போன்ற லீன் இறைச்சிகளில் அதிகமாக ஹீம் இரும்பு சத்து இருக்கிறது.இது நான் ஹீம் இரும்புச்சத்தை விட நம்முடைய உடலானது எளிதாக உறிஞ்சப்படுகிறது. அடிக்கடி லீன் இறைச்சிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக அளவு இரும்பு சத்து உடலில் அதிகரிக்கும்.மற்ற உணவுகளையும் இந்த இறைச்சிகளோடு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சரிவிகித உணவு முறையை பின்பற்றலாம்.

மேலே சொன்ன உணவுகளை சாப்பிடுவதோடு அதிகப்படியாக டீ , காஃபி போன்ற பானங்களை குடிக்காமல் இருந்தாலே, பெண்களின் உடலில் இரும்பு சத்தினை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories