Cauliflower Pickle Recipe in Tamil : இனிய நண்பர்களுக்கு வணக்கம். நம் ஆனந்தி சமையல் பதிவில் தினமும் சுவையான சமையல்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் அனைவருக்கும் பிடித்த காலிபிளவரை கொண்டு எப்படி ஊறுகாய் செய்வது என்பதை பார்க்கப்போகிறோம். பொதுவாக ஊறுகாய் என்றாலே எல்லோருக்கும் நாக்கில் எச்சில் ஊரும்.

என்னதான் வகை வகையான கூட்டு வைத்து சாப்பிட்டலும் கொஞ்சம்`ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கும். ஊறுகாயில் பல விதங்கள் உள்ளது. அந்த வகைகளில், இன்று நம் எல்லோர்க்கும் மிகவும் பிடித்த காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
How To Make Cauliflower Pickle Recipe in Tamil
காலிஃபிளவர் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
- காலிஃபிளவர்- 1
- மிளகாய் தூள்- 4 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கடுகு- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 பழம்
- பூண்டு- 15 பற்கள்
- மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
- தூள் உப்பு- 2 ஸ்பூன்
Cauliflower Pickle Recipe in Tamil
காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை:
ஸ்டேப் -1
முதலில் காலிஃபிளவரின் அடிப்பகுதினை நீக்கி கொள்ளவும், அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஸ்டேப் -2
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஸ்டேப் -3
இதனுடன் நறுக்கி வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஸ்டேப் -4
இப்போது, ஒரு கடாயில் 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
மதிய உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? என்ன இனிப்பு சாப்பிடுவது ?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஸ்டேப் -5
பிறகு, வறுத்த வைத்த வெந்தயம் மற்றும் கடுகை தனித்தனியாக மிக்ஸி ஜாரில் எடுத்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப் -6
இப்போது, ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும், அதில் உரித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு, இதனுடன் மிளகாய் தூள், பொடியாக அரைத்த கடுகு தூள் மற்றும் வெந்தய தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்யில் நன்றாக கலந்து விடவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஸ்டேப் – 7
இவைகள் எல்லாம் எண்ணெயில் நன்றாக கலந்த பிறகு, அடுப்பை குறைவான தீயில் வைத்து சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிபிளவரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ஸ்டேப் -8
இப்போது அடுப்பை நிறுத்தி விட்டு எலுமிச்சை சாற்றினை சேர்த்து மூன்று மணிநேரம் வரை ஊறவைத்து எடுத்தால் ருசியான காலிஃபிளவர் ஊறுகாய் தயார்.!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதனை பிரிட்ஜில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
தித்திப்பான சேமியா பாயசம் செய்வது எப்படி?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇