Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்கேப்டனின் சினிமா வாழ்க்கையும்.. அரசியல் வாழ்க்கையும்… விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறியது ..

கேப்டனின் சினிமா வாழ்க்கையும்.. அரசியல் வாழ்க்கையும்… விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறியது ..

Date:

- Advertisement -

Vijayakanth History : விஜயகாந்தின் இயற்பெயர் நாராயணன் விஜய்ராஜ் அழகர்சுவாமி என்பதாகும். விஜயகாந்த் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையில் முக்கியமான பிரபலங்கொண்ட நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் வருடம் ‘அகல் விளக்கு’ இனிக்கும் இளமை சினிமாவின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2015 ஆம் வருடம் வரையில் 150 க்கும் மேற்பட்ட தமிழ் சினிமாவில் நடித்து தமிழ் மக்கனினுடைய அன்பினை கவர்ந்து பிரபலமானவர்.

விஜயகாந்த் அவர்கள் இது வரையில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.இவருடைய திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் தமிழ்த்திரை படங்களில் மட்டும் இவர் நடித்துள்ளார். இவருக்கு “புரட்சி கலைஞர்’ என்ற பட்டமும் தமிழ் சினிமாவில் உண்டு.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

விஜயகாந்த் 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி அன்று மதுரையில் கே.என்.அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமிக்கு மகனாக பிறந்தார். இவர் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையால் பல இன்னல்களை கடந்து சென்னைக்கு வந்து 1979 ஆம் வருடம் ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் தொடர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார்.

1990 ஆம் வருடம் ஜனவரி மாதம் விஜயகாந்த் பிரேமலதாவை மதுரையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் உள்ளனர். சகாப்தம் என்ற திரைப்படத்தில் மூலம் இவரது இளையமகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு விஜயகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் திரையில் அறிமுகமானார். இவர் 1979 ஆம் வருடம் அகல்விளக்கு படத்தில் நடித்திருக்கிறார். பின்னர் அதே வருடம் இனிக்கும் இளமை என்னும் படத்தில் நடித்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vijayakanth History
Vijayakanth History

Vijayakanth History Name Change

விஜயராஜ் என்ற சொந்த பெயரில் உள்ள ராஜ் என்ற பாதி பெயரை எடுத்து விட்டு காந்த் என்னும் வார்த்தையினை சேர்த்து ‘விஜயகாந்த்’ என்று தன்னுடைய பெயரினை மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், பின்னர் கதாநாயகனாக தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். 1981 ஆம் வருடம் இவரது முன்னணி நடிப்பில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்து இவருக்கு தனி அடையாளத்தை பெற்றுத்தந்தது.

தமிழ் சினிமாவில் வில்லனாக தனது பயணத்தை ஆரம்பித்து அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அவர் நடிக்கும் படங்களில் மிகவும் அழுத்தமாக தேசப்பற்றை பற்றிய வசனங்கள் இருக்கும். திருட்டு, ஊழல் என்று சட்டவிரோதங்களுக்கு இவரின் குரல் சமூகத்திலும், திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக ஒழிக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஊழலுக்கு எதிரான திரைக்கதையும் தேசப்பற்று திரைப்படங்களாகவும் இருக்கும்.ராணுவம்,காவலர் இரட்டை கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார்.

இவர் ‘புரட்சி கலைஞர்’ என்ற படத்தினை தமிழ் சினிமாவில் பெற்றிருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை ‘கேப்டன்’ என்றே அழைக்கின்றார்கள். இவருடைய 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திற்கு பிறகு இவருக்கு ‘கேப்டன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவரது நாட்டுப்பற்றையும், நடிப்பையும் பாராட்டி திரு. விஜயகாந்த் அவர்களுக்கு 2001 வருடம் கலைமாமணி விருதும், 1994 ஆம் வருடம் எம் ஜி ஆர் விருதும்,2009 ஆம் வருடம் சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருதை இவருக்கு இந்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைத்துறையில் நடிகராக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்க தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட சங்கமானது பலகோடி கடனில் இருந்தது. இவருடைய சிறந்த வழிகாட்டுதலின் பேரில் தமிழ் திரைப்பட சங்கத்தை ஒரு முன்னணி சங்கமாக உயர்த்தியுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகர் விஜயகாந்த் தமிழ் படங்களில் தனது தேசப்பற்று வசனங்கள் வாயிலாக மிகவும் பிரபலமானவர். அரசியலிலும் இவருடைய பங்களிப்பை கொடுத்துள்ளார். “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து புகழ் பெற்றுள்ளார். இவர் 2006 – 2011 ஆம் வருடம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ஆனால் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அவரை மீண்டும் சேர்த்தார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சுவாசிக்க திணறுவதாலும் வென்ட்டிலேட்டர் சப்போர்ட்டில் இருப்பதாகவும் தேமுதிக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. அந்த தகவலானது வந்ததுமே தேமுதிக தொண்டர்கள் அனைவரும் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை முன்பு கூடிவிட்டார்கள். இதனால் அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vijayakanth History
Vijayakanth History – Vijayakanth History

விஜயகாந்த் வீட்டில் ரசிகர்களும், தொண்டர்களும் சோகத்துடனும், கண்ணீருடனும் நின்றார்கள். இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த தகவலை கேட்டதும் மருத்துவமனை முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் கதறி அழுதார்கள்

உதவி என்று கேட்பவர்களுக்கு யோசிக்காமல் உதவும் மனிதர் சென்றுவிட்டார் என்று பலரும் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள காலங்களில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் உதவிகளை செய்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கலைநிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் நடத்தி நடிகர் சங்கத்திற்கு உதவியுள்ளார். அம்மாதிரி யாராலும் இனி செய்யமுடியாது. இப்படி ஏன் கேப்டன் உங்க உடம்பை பாதுக்காம போயிட்டீங்க? சிங்கம் போன்று இருந்த மனிதர் இன்று எலும்பும் தோலுமாக மாரி இறந்துவிட்டார்.கேப்டனுக்கு இதுமாதிரியான மரணம் வராமல் இருந்திருக்கலாம்.

கடந்த சில வருடங்களாகவே வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக இருந்தார். விஜயகாந்த் கலந்து கொண்ட தேமுதிக பொது குழு கூட்டம் அவருக்கு தெரியாமலே போய்விட்டதே என்று தொண்டர்கள் கதறுகிறார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

விஜயகாந்த் தொண்டர்கள் கண்ணீர் | Vijayakanth History

விஜயகாந்த் பற்றி அவருடைய ரசிகர்கள் நம்மிடம் கூறியிருப்பது. அவர் கம்பீரமாக வாழ்ந்த மனிதருங்க, அப்படிப்பட்டவர் உட்கார முடியாமலும், நடக்கமுடியாமலும் ஒரு பொம்மை போல இருந்ததை பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது. எங்களுக்கு இப்படி இருந்தது என்றால் கேப்டனுக்கு எவ்வாறு இருந்திருக்கும்.

அவர் இல்லை என்பதை யாரும் ஏற்க முடியாது கஷ்டமாகவும் இருக்கிறது. ஆனால் இப்படியாக இருந்து கஷ்டப்படுவதை விட போனது அவருக்கு நல்லதுதான். கேப்டன் போல நல்ல மனித உள்ளம் கொண்டவர்களை பார்ப்பது மிகவும் கடினம். கேட்டாலே உதவி செய்யாமல் பயந்து ஓடும் மனிதர்கள் இருக்கிற இந்த உலகத்தில் கேட்காமலேயே உதவி செய்யக்கூடிய மனுஷன் தாங்க இந்த மதுரைக்காரர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் இனியும் இந்த உலகில் இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்று கடவுளாகவே அவரை அவரோடு அழைத்து கொண்டுவிட்டார். என்பது போல தெரிவித்துள்ளார்கள். விஜயகாந்த் இறந்தவுடன் அவருடைய வீட்டின் முன்பு இருக்கும் கொடி கம்பத்தில் தேமுதிக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவர் வந்த ஆம்புலன்ஸை சுற்றி நின்ற பெண்கள், தொண்டர்கள் விஜயகாந்த் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று எங்களால் நம்பமுடியவிலையே கதறி அழுதார்கள்.

முன்னதாக தேமுதிக பொது குழு கூட்டத்திற்கு ஜேரில் விஜயகாந்த் வந்ததை பார்த்ததும் தொண்டர்கள் அனைவரும் வேதனை தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார் …

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories