Delicious food : மனிதர்கள் அனைவருக்கும் இருக்க இடம், உண்ண உணவு உடுத்த உடை இவைகள் மிகவும் அவசியமானது, இதில் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் வாழமுடியாது. நாம் சாப்பிடுகிற உணவு எல்லாமே ஒவ்வொரு சுவையை தரும். இந்த சுவைகளை வைத்துதான் அனைவரும் சாப்பிடுகிறோம்.
இந்த சுவைகளில் அதிகமாக சாப்பிடக்கூடியது காரம், இனிப்பு இவைகளை சுவைத்து சாப்பிடுகிறோம். இந்த சுவைகளில் ஆறு வகைகள் உள்ளன, இதை அனைவரும் அறிந்ததுதான், ஆனால் திடீரென்று கேட்டால் உடனே ஆறு சுவைகளும் ஞாபகத்தில் வராது. அதனாலதான் அறுசுவைகளை பற்றியும் அதன் பயன்களைப்பற்றியும் இந்த பதிவில் காணப்போகிறோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆறு சுவைகள் : Delicious food
ஆறு சுவைகளின் பெயர்கள் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு , துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு போன்றவைகள்.
இனிப்பு :
இனிப்பு சுவையானது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது இனிப்பினால் உடற்பருமன் அதிகரிக்கும் மேலும் உடல் பலம் பெரும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லுவார்கள். அது போல அதிகமாக இனிப்பை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதில் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும்.
புளிப்பு :
புளிப்பு சுவையானது சிலருக்கு பிடிக்கும்.சிலருக்கு பிடிக்காது. ஆனால் புளிப்பு சுவையானது பசியை உண்டாகும்.புளிப்பானது நரம்புகளை பலப்படுத்துகிறது. புளிப்பு சுவையை அதிகமாக சாப்பிட்டால் உடல் சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எலுமிச்சை,மாங்காய், தக்காளி, புளி, கிடாரங்காய் மற்றும் நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை உள்ளது.
உவர்ப்பு :
உப்பு சுவை இருந்தால் உவர்ப்பு சுவை உள்ளதாக இருக்கும். உவர்ப்பு உமிழ் நீரை சுரக்க செய்யும். செரிமான திறனை அதிகப்படுத்தும். இந்த உவர்ப்பு சுவையை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், வாழைத்தண்டு, கீரைத்தண்டு போன்ற காய்கறிகளில் உவர்ப்பு சுவை அதிகமாக இருக்கிறது.
துவர்ப்பு :
துவர்ப்பு சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கிறது, வயிற்று போக்கை தடுப்பதற்கு பயன்படுகிறது, பித்தத்தை சரியாக வைத்திருக்க பயன்படுகிறது. இந்த சுவையை அதிகமாக எடுத்து கொண்டால் வாத நோய் பிரச்சனை ஏற்படும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மாதுளை, மஞ்சள், வாழைப்பூ, வாழைக்காய் போன்றவற்றில் துவர்ப்பு சுவை சுவை இருக்கிறது.
Also Read: நறுமணமுள்ள பயிரான கிராம்பு சாகுபடி செய்யும் முறை ..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கசப்பு :
கசப்பு சுவையானது யாருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதில் நன்மைகள் அதிகமாக இருக்கிறது. கசப்பினை சாப்பிடுவதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சுண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளில் கசப்பு சுவை இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கார்ப்பு :
கார்ப்பு என்பது கார ருசியை குறிக்கிறது. கார ருசி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். எவ்வளவு காரமாக இருந்தாலும் உஸ், உஸ் என போட்டு கொண்டே சாப்பிடுவோம். காரத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் புண்கள் ஏற்படும்.
கடுகு, மிளகு, மிளகாய், வெங்காயம் போன்றவை கார்ப்பு சுவை கொண்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇