Friday, July 11, 2025
Homeடெக் நியூஸ்ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் இனி ஒரு நிமிட வாய்ஸ் நோட்ஸ்களை வைக்கலாம்… பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!!!

ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் இனி ஒரு நிமிட வாய்ஸ் நோட்ஸ்களை வைக்கலாம்… பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!!!

Date:

- Advertisement -

நீங்கள் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவது போல இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கான வாய்ஸ் நோட்ஸ் செயல்படுகிறது. மைக் பட்டனை அழுத்தி கொண்டு உங்களது வாய்ஸ் நோட்டை பதிவு செய்து, ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக வெளியிடலாம்.

மெசேஜ்களை டைப் செய்வதற்கான தேவையை அகற்றி சௌகரியத்தை மேம்படுத்தும் ஒரு அம்சமாக வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்ஸ் அமைகிறது. இந்த அம்சம் பலருக்கு மிகவும் பிடித்தமானது. ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் கூட இது பயன் உள்ளதாக அமைகிறது. ஆனால் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் வாய்ஸ் குறிப்புகளை நீங்கள் 30 வினாடிகளுக்கு மட்டுமே அமைக்க முடியும் என்ற வரம்பை பெற்றிருந்தது. ஆனால் தற்போது ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளாக நீங்கள் வைக்கும் வாய்ஸ் குறிப்புகளை 1 நிமிடம் வரை அமைப்பதற்கு வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

whatsapp voice notes status
whatsapp voice notes status

பீட்டா(beta) சோதனைகளில் உண்டாகக்கூடிய சிக்கல்களை சரி கட்டி விட்டு, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த அப்டேட் கூடிய விரைவில் மில்லியன் கணக்கான பயனாளார்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது அது பலரால் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே நீண்ட வாய்ஸ் நோட்ஸ்களுக்கான ஆதரவு தொடர்பான முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. மெசேஜ் பாரில் காணப்படும் மைக் பட்டனை அழுத்தி கொண்டு நீங்கள் கூற விரும்பும் மெசேஜை ரெக்கார்ட் செய்து அல்லது அப்டேட் செய்யும் பொழுது அது நேரடியாக உங்களுடைய எல்லா தொடர்புடையவர்களுக்கும் ஷேர் செய்யப்படும் என்பது இந்த அம்சத்தின் சிறந்த பகுதியாக அமைகிறது.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ செய்யுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெச்சிக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஜா பூக்களோட..!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

whatsapp voice notes status

நீங்கள் வாய்ஸ் மெசேஜ்களை செலுத்தும் அதே வழியில் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கான வாய்ஸ் குறிப்பு செயல்படுகிறது. மைக் பொத்தானை அழுத்திக்கொண்டே உங்களுடைய வாய்ஸ் நோட்டை பதிவு செய்து, ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக வெளி இடலாம். நீங்கள் பதிவு செய்த கிளிப்பிங் ஆடியோ உங்களுக்கு நன்றாக இல்லை என்றால் பாரை ஸ்லைடு செய்து, வாய்ஸ் நோட் அப்லோட் ஆவதை கேன்சல் பண்ணி விட்டு மீண்டும் பதிவு செய்யலாம். தற்போது வாட்ஸ்அப் இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டாவில் சோதனை செய்து கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இதன் அதிகாரப்பூர்வ பதிப்பை எதிர்பார்க்கலாம்.

whatsapp voice notes status
whatsapp voice notes status

அதேபோல வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய டிஃபால்ட் தீம் கலரை மாற்றுவதற்கான அனுமதியையும் கூடிய சீக்கிரம் பெறுவார்கள். இதற்கான சோதனை ஏற்கனவே iOS பதிப்பில் தொடங்கிவிட்டது. சாட் தீம்களைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் ரெகுலர் மோடு மற்றும் டார்க் மோட் உள்ள போனின் டீஃபால்ட் தீமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆனால் கூடிய விரைவில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட தீம்களை இனி நீங்கள் உபயோகப்படுத்தலாம். இதற்கான சமீபத்திய எக்ஸ்பிரிமென்ட் வாட்ஸ்அப் iOS 24.11.10.70 பீட்டா பதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. சாட் மற்றும் தீம் கலர்களுக்கு 5 நிறங்கள் வரை வழங்க போவதாக வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன் பரிந்துரை செய்துள்ளது.

தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? ட்ரை பண்ணி பாருங்களேன் ! ஒரு பிடி சாதமும் மிச்சம் இருக்காது!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories