Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்Frizzy Hair : உங்கள் தலைமுடி குளித்த பின் ஓட்டும் தன்மையுடையதாக இருப்பதற்கு காரணம்?

Frizzy Hair : உங்கள் தலைமுடி குளித்த பின் ஓட்டும் தன்மையுடையதாக இருப்பதற்கு காரணம்?

Date:

- Advertisement -

Frizzy Hair  : இன்றைய சூழ்நிலையில் தலைமுடியை பராமதிப்பது மிகவும் கடினமாக மாறிக்கொண்டு வருகிறது நாம் ஆன்றாட வாழ்கையில் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் நம்மை பாதிக்கிறது. இது நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் முதல் அன்றாடம் செய்யும் செயல்கள் வரை இருக்கும். இவைகள் நம்முடைய உள்ளுறுப்புகளை மட்டுமின்றி, வெளிவுறுப்புகளையும் பாதிக்க செய்கிறது. அதில் பாதிப்பாக நம்முடைய முடி சம்பந்தமான பிரச்சனைகள்.

முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, எண்ணெய்ப்பசை, வழுக்கை மற்றும் இளம் நரை இப்படி பலவித பிரச்சனைகள் முடியின் மூலம் வருகின்றது. இந்த மாதிரி உள்ள பிரச்சனைகளுக்கும் நாம் உன்னும் உணவு பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Frizzy Hair
Frizzy Hair

குறிப்பாக தலையை நன்றாக அலசினாலும் பிசு பிசுப்பாக இருப்பதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் தான் என்கிறது அந்த ஆய்வு. அவை எந்தெந்த உணவுகள் என்பதை பற்றி இந்த பதிவில் காணப்போகிறோம்.

சர்க்கரை

நாம் தினமும் சாப்பிடும் உணவில் அதிகமாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளும் போது இந்த பிரச்சனை கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதிகமாக சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன்கள் செய்யும் மாற்றங்கள் நம் தலையில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகளை சுரக்க செய்துவிடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கொழுப்பு உள்ள உணவுகள்

அதிக அளவு கொழுப்பு உள்ள உணவை சாப்பிட்டால் அந்த உணவு உடலை பாதித்துவிடும். அதுமட்டுமின்றி நமது சருமம் முடியினையும் சேர்த்து பாழாக்கிவிடும் . பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் கோழி இறைச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் இதில் சேரும்.இதனால் தலைப்பகுதியில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் சுரக்க ஆரம்பிக்கும்.

ஹார்போஹைட்ரேட்

ஹார்போஹைட்ரேட் இருக்கிற உணவுகளை சாப்பிட்டால் முடியில் எண்ணெய் பிசு பிசுப்பு வரத்தொடங்கும். குறிப்பாக பிஸ்கட், பிரட்,குக்கீஸ் போன்றவைகளை சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெள்ளை உப்பு

முடிந்த அளவு உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். நாம் அப்படி பயன்படுத்தினால் நமது உடலில் பல மாற்றங்களை தவிக்க முடியும். அதிக அளவு உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் அது எண்ணெய் பிசு பிசுபிற்கு வித்திடுவது போலாகிவிடும். முடிந்தவரை உப்பை குறைவாக பயன்படுத்துவதால் சர்க்கரை நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்ட கடலை, சிப்ஸ், பட்டாணி இவற்றை சாப்பிடுவதை தவிர்த்தால் இந்த எண்ணெய் சுரப்பதை தவிர்க்க முடியும்.

பால் பொருட்கள்

நாம் சாப்பிடும் உணவில் பால் பொருட்களை அதிகமாக சேர்த்து கொள்வதால் முடியில் எண்ணெய் பிசுக்கு ஏற்படக்கூடும். மேலும் இதனால் முகத்தில் எண்ணெய் வடிதல், முகப்பருக்கள் ஆகிய பிரச்சனைகளும் உருவாகலாம், இந்த பால் பொருட்கள் சாப்பிடுவதால் நம் உடலில் பல ஹார்மோன்கள் மாற்றங்களும் உண்டாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பால் பொருட்களை முடிந்தவரையில் சாப்பிடுவதை தவிப்பது நல்லது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வறுத்த மற்றும் பொறித்த உணவு வகைகள்

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பொறித்த அல்லது வறுத்த உணவுகளை தவிர்க்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம். இதுபோன்ற பொறித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை அதிகமாகிறது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிதல் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளை முடிந்தவரை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதற்கான தீர்வு | Frizzy Hair

எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க விட்டமின் பி, விட்டமின் டி மற்றும் சிங்க் இருக்கிற உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலே போதும், மேலும் கெட்ட கொழுப்புகள் உள்ள உணவுகளை தவிர்ப்பதால் இந்த பிரச்சனைகள் வராது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL CLICK HERE
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>வி தமிழ் செய்தி
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –>ஆனந்தி சமையல்

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories