Veg vs Non-Veg Which is better : சைவ உணவு பிரியர்களுக்கும், அசைவ உணவு பிரியர்களுக்கும் இடையே எந்த உணவு சிறந்தது என்பதை பற்றி பல நூற்றாண்டு காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரே வீட்டில் உள்ளவர்களுக்கு இடையேயும் இத்தகைய விவாதங்கள் நடைபெறுவது உண்டு.

எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்திட வேண்டும் என்று கூறுபவர்கள் சைவ உணவை விரும்புவார்கள். பிற உயிர்கள் மீது அன்பு காட்டுகின்ற அதே சமயத்தில், உணவுக்காக படைக்கப்பட்ட உயிரினங்களை உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வதை அசைவம் உண்பவர்கள் விரும்புகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இன்னொரு பக்கம், எந்த உணவு நல்லது மற்றும் ஆரோக்கியமானது என்ற விவாதங்களும் பலமாக நடைபெறுகிறது. அசைவ உணவு பிரியர்களை பொருத்தவரையில் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட நீர்நிலை உயிரினங்கள், ஆடு, மாடு, பன்றி, கோழி, காடை உள்ளிட்ட இறைச்சி வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
இந்திய மக்களின் விருப்பம் எது?
நாடு முழுவதிலும் பல நூற்றாண்டு காலமாகவே பெரும்பாலான மக்கள் அசைவ உணவு பிரியர்களாக இருந்து வருகின்றனர். அவர்களுடைய இறை வழிபாட்டு கலாச்சாரத்திலும் அசைவ உணவு ஓர் அங்கமாக இருந்து வருகிறது. அதேபோல மத நம்பிக்கைகளை ஏற்று சைவ உணவை மட்டுமே விரும்புகிற மக்களும், தனிப்பட்ட நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு சைவ உணவை விரும்புகின்ற மக்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அசைவ உணவுகளின் ஆரோக்கியத்தை பற்றி பேசுகின்ற அனைவருமே முதலில் முன்வைக்கின்ற வாதம், அசைவ உணவுகளில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது என்பதுதான். அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி, தசை மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடலை சீர் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் இருக்கிறது.
மெல்லிய இறைச்சி உணவுகளில் இரும்புச்சத்து, ஜிங்க், விட்டமின் பி12, ஒமேகா த்ரீ கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. அதேசமயம் சிவப்பு நிற இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!
அனைத்து காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்புகள் இவைகள் சைவ உணவு பட்டியலில் அடங்குகின்றன. சைவ உணவு என்றாலே அதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். மேலும் ஆண்டி ஆக்ஸிடென்ட், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சைவ உணவுகள் மிக எளிமையாக செரிமானமாக கூடியவை மற்றும் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கும். சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவு என்பதால், இவற்றை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருக்கும் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். இதனால் இதய நலனுக்கு ஏற்ற உணவாக சைவ உணவுகள் கருதப்படுகின்றன.
இறைச்சிகளில் மட்டுமே மிகுதியாக கிடைக்கக்கூடிய விட்டமின் பி2, இரும்புச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்களை சைவ உணவு பிரியர்களுக்கு கிடைப்பதில் மிகுந்த சவால் உண்டு. அதேபோல சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அமினோ அமிலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நீங்கள் சைவ உணவு பிரியர்களாக இருந்தாலும், அசைவ உணவு பிரியர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட சில உணவு பொருட்களை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடாமல், பல்வேறு வகையான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சீரான அளவில் கிடைக்கும், மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
