Frog marriage for rain : நம்முடைய கலாச்சாரத்தில் எத்தனையோ வித்தியாசமான நடைமுறைகள் உள்ளது.அதில் ஒன்றுதான் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது. திருமணம் இரண்டு தவளைகளுக்கு செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது.இது,பணம்,நேரம் ஆகியவற்றை வீன் செய்யும் செயல்,அல்லது முட்டாள் தனமானது என்று பலவிதமாக தவளை திருமணத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதை வேடிக்கை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூடுகிறது.
இவர்கள் இந்த திருமணம் முடிந்ததும் விருந்து சாப்பிட்டுவிட்டு வீட்டற்கு செல்லும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியில் கலந்து செல்லும் உணர்வு ஏற்படுகிறது. வெயில், காற்று, மழை, வீரம், காதல் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுள் காரணமாக இருப்பதுபோல நம்பப்படுகிறது. அதனால் மழைக்கான கடவுளை மகிழ்விப்பதற்காக இந்த தவளைக்கு திருமணம் சடங்கு நடத்துவதாக சொல்லப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்து மாதத்தில் பல விதமான வழிபாட்டு முறைகள் கடைபிடிப்பதை எவ்வளவோ பார்த்திருக்கிறோம், கேள்வியும் பட்டிருக்கிறப்போம். அதில் சில வழிபாட்டு முறைகள் அறிவில்லாத ,பொய்யாக இருந்தாலும் அதை செய்வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சரியாக இருப்பதாக இருக்கும். அப்படி நம் எல்லோருக்கும் தெரிந்த,வினோதனமான தவளை திருமண வழிபாட்டு முறை ஆகும்.

மழை வேண்டும் என்பதற்காக தவளைக்கும், தவளைக்கும் கல்யாணம் செய்து வைப்பது,கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பது என்ற முறை இருக்கிறது. நம் இந்தியாவில் தமிழ் நாடு,மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அசாம் மற்றும் இமயமலை பகுதிகளில் பழக்கம் பல காலங்களாக இருந்து வருகிறது.இப்போதும் தவளை கல்யாணம் பல இடங்களில் நடத்தப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தவளைகளுக்கு கல்யாணம் நடத்த காரணம் :
நம் இந்தியா,நம் இந்திய மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளார்கள். நாம் அனைவரும் விவசாயம் செய்வதற்காக தண்ணீரை நம்பித்தான் இருக்கிறோம். அப்படி விவசாயத்திக்கான தண்ணீர் ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் மூலமாக பெறப்படுகிறது. ஆனால் தற்போது கால்வாய்கள் அனைத்தும் காணாமல் காணாமல் போனது. இதனால் விவசாயிகள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கிறார்கள். அனைத்துமாதங்களும் மழை பொழியாது என்பதால் மழைக்கான தெய்வத்தை மகிழ்விப்பதற்காக இந்த தவளை கல்யாணம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
தவளை கல்யாணம் நடைமுறைகள்: Frog marriage for rain
மழை பொழிய வேண்டும் என்பதற்காகவே ஆண் மற்றும் பெண் தவளைகளை கண்டு தேர்வு செய்வார்கள் பின்னர் மனிதர்களுக்கு நடத்தக்கூடிய திருமணம் போல் அனைத்துவிதமான சடங்குகளும் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் இவர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவது போன்று இந்த தவளை திருமணத்திலும் கிராம மக்கள் அனைத்து பேரும் கலந்து கொள்கிறார்கள். மணமகளான தவளைக்கு மஞ்சள் பூசியும்,நலுங்குவைக்கும் சடங்கும் நடத்தப்படும். மணமகன்,மணமகள் அழைப்பு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் நடத்தப்படும். இரண்டு தவளைகளுக்கும் மாலை மாற்றி, இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது ஆகவே இருவரும் கணவன் – மனைவி என்று அறிவிக்கப்படும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திருமணத்திற்கு பின்பு தவளைகளின் நிலை : Frog marriage for rain
திருமணம் நடந்து விருந்து இல்லாமலா ? கண்டிப்பாக மிகவும் சிறப்பான விருந்தும் நடத்தப்படும். மேளதாளம், வாணவேடிக்கை ஆகியவையும் நடத்தப்படும். இந்த திருமணத்திற்கு பின்பு அந்த தவளைகள் கணவன், மனைவியாக வாழுமா என்றால் வாழாது. கல்யாண சடங்குகள் நடந்து முடிந்ததும் அந்த தவளைகளை எதாவது ஆறு,குளம் இவற்றில் கொண்டு போய் விடப்படும். ஆனால் இப்படி செய்வதால் மழை கடவுளானவர் இதை கண்டு புன்னகைத்து,மகிழ்ச்சி அடைவாராம். அப்படி அவர் மகிழ்ச்சி அடையும் போது மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.
தவளைகளுக்கு திருமணம் தோன்றியது எப்படி? Frog marriage for rain
பொதுவாக இந்துமத சமய வழிபாட்டு முறைகளுக்கு எதாவது ஒரு அறிவியல் காரணங்கள் இருக்கும்.ஆனால் இந்த தவளை திருமணத்திற்கு எந்த ஒரு காரணமும் அறிவியல் ரீதியாக இல்லை. இந்த பழக்கமானது எப்படி, எப்போது, எங்கு நடந்தது என்று தெரியாது.வெய்யலின் தாக்கம் அதிகமாக கொண்ட மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த தவளை திருமணம் நடைபெறும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மகாவிஷ்ணுவானவர் உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் காப்பதற்காக நிலத்திலும், நீரிலும் ஆமை, மீன் போன்ற பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதை முன்னுதாரணமாகக் கொண்டு தவளையும் நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினம் என்பதால் தவளைக்கு கல்யாணம் செய்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் மழை பெய்து வுலகத்தி உள்ள உயிரினங்கள் அனைத்தும்
காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு தவளைகளை தேர்வு செய்வது ஏன் ? Frog marriage for rain
பொதுவாக நம் மக்களிடையே தவளை சத்தமிட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை பெருபாலும் நிலவுகிறது. முதல் முறை தவளை சத்தமிட்டு மழை வராமல் இருந்தால்,இரண்டாவது முறையும் தவளை சத்தமிட்டால் அப்போதுதான் தவளைகளுக்கு திருமணமானது ஏற்பாடு செய்யபடும் வழக்கம் உள்ளது, மற்றொரு காரணம் மழை பெய்தால் தண்ணீர் அதிகமாகும். அந்த தண்ணீர் பெருகும் சமயத்தில் தவளைகள் இனப்பெருக்கம் செய்யும். ஆகவே தவளைக்கும், மழைக்கும் நெருக்கிய தொடர்பு இருப்பதனாலேயே தவளைக்கு திருமணம் செய்யும் வழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |