Friday, July 11, 2025
Homeஸ்வீட்ஸ்வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!

வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!

Date:

- Advertisement -

Atthipazham Kheer Recipe In Tamil : வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்! இதை வீட்டில் ஒரு முறையாவது செய்து பாருங்களேன்!

எந்த ஒரு விருந்தோம்பலாக இருந்தாலும் அந்த இடத்தில் இனிப்பு பொருளுக்கென்று தனி இடம் இருக்கும்.அது போன்ற நேரங்களில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து செய்வது அந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பானதாக மாற்றிவிடும். அதுவும் உடலுக்கு நல்லது செய்யக்கூடிய பழங்களில் தயாரிக்கப்பட்டதாக அந்த இனிப்புவகை இருந்தால் தயக்கம் இல்லாமல் ஒரு பிடி பிடித்து விடுவீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அப்படி ஒரு நன்மையுள்ள அத்திப்பழம், நெய் மற்றும் உலர்ந்த பழ வகைகளால் தயாரிக்கப்படும் நல்ல ருசியான இனிப்பு வகைதான் அத்திப்பழ கீர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த அத்திப்பழ கீரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும்.

Atthipazham Kheer Recipe In Tamil
Atthipazham Kheer Recipe In Tamil

Atthipazham Kheer Recipe In Tamil

கீர்ரில் ரவா கீர், கேரட் கீர் மற்றும் கோதுமை கீர் போன்ற பல வகையான கீர் வகைகள் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட அத்திப்பழத்தை பயன்படுத்தி இனிப்பான கீர் செய்வதை பற்றி பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்த அத்திப்பழம் சர்க்கரை நோய், உடல் வீக்கம், இரத்த சோகை, சர்க்கரை புண், நமைச்சல், சொறி சிரங்கு, நீர்கட்டிகள், புண், கட்டிகள், கண்களில் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் நல்ல பலன் தருகிறது. மேலும் இவை மண்ணீரல், கல்லீரல் வீக்கம் மற்றும் அடைப்புகளை போக்க பயன்படுகிறது.

வீட்டிற்கு பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சக்தி நிறைந்த பானமாக, வீட்டில் உலர்த்த அத்திப்பழம் வைத்திருந்தால் அதனை கொண்டு கீர் செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகளுக்கு சக்தி கிடைப்பதோடு, உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மேலும் இந்த கீர் அவர்களை விரும்பி குப்பதாகவும் இருக்கும். கடைகளில் வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலேயே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய அத்திப்பழ கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Read Also : கொய்யாபழத்தை தினமும் சாப்டுவதால் கிடைக்கும் நன்மைகள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment: Atthipazham Kheer Recipe In Tamil

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுல்

தேவையான பொருட்கள்:

  • 6 அத்திப்பழம்
  • 4 முந்திரி பருப்பு
  • 4 பாதம் பருப்பு
  • 1 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டீ ஸ்பூன் குங்குமப்பூ
  • 3/4 லிட்டர் பால்
  • 1/4 நாட்டு சர்க்கரை
  • 5 டேபிள் ஸ்பூன் நெய்
  • 4 டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ்டு மில்க்
  • 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

செய்முறை:

முதலில் அத்திப்பழம், பாதம் பருப்பு, முந்திரி பருப்பு இவற்றை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பின்பு இவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும் அது காய்ந்ததும் அத்தி பழம், பாதம், முந்திரி விழுதை சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். பின்னர் அதில் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன் பிறகு ஒரு கொதி வந்ததும் பால் பவுடர் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விடவும். பால் நன்கு சுண்டியதும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, இறுதியாக குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். நமக்கு ஆரோக்கியமான மற்றும் ருசியான அத்திப்பழம் கீர் தயாராகிவிட்டது.

Read Also : தாய் ஐஸ் டீ யை எப்படி செய்வது?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nutrition:

Serving: 400g | Carbohydrates: 7.7g | Calories: 120kcal | Protein: 4.75g | Iron: 4.37mg | Fiber: 2.4g | Fat: 0.4g | Calcium: 35mg | Potassium: 232mg | Vitamin A: 5IU

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories