Chickpea cutlet : உங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்துகொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று நீங்களும் யோசித்து கொண்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுபவர்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால் போதும் அதை வைத்து சுவையான கொடைக்கடலை கட்லெட் செய்து கொடுங்கள்.
இந்த கட்லெட் செய்வது மிகவும் எளிதானது. முக்கியமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். சின்ன பிள்ளைகளுக்கு நல்ல ருசியான அதே நேரத்தில் அவர்கள் விரும்பக்கூடிய மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து தருவது என்பது சாதாரண விஷயமில்லை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கொண்டைக்கடலையில் கொழுப்பு, புரதம் இரும்புசத்து,மக்னீஷியம் மற்றும் நார்சத்து இருக்கிறது. இவைகள் உடலின் சக்தியை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பெருபாலும் குழந்தைகள் கொண்டக்கடலையை விரும்பி சாப்பிடவது கிடையாது. ஆனால் இதில் அதிக சத்துகள் இருக்கிறது. இருந்தும் குழந்தைகள் அதிகம் கொண்டைக்கடலையை சாப்பிடுவதில்லை. இதில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு கொண்டகடலையை அதிகம் கொடுப்பது மிகவும் நல்லது.
Read Also : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த கொண்டை கடலையை குழந்தைகளுக்கு பிடித்தது போல் கட்லெட் வடிவில் செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். அப்படி ருசியான கட்லெட்டைதான் இப்போது எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Chickpea cutlet
கொண்டைக்கடலையை வைத்து நம் வீட்டில் சுண்டல் மற்றும் குழம்பு வைத்துதான் சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் கொண்டக்கடலையில் கட்லெட் செய்து பார்க்கலாம். ஆகவே இன்று கட்லெட்டினை கொண்டக்கடலையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Equipment :
1 குக்கர்
1 மிக்ஸி
1 தோசை கல்
1 பவுல்
தேவையான பொருட்கள்: Chickpea cutlet
- 150 கிராம் கொண்டைக்கடலை
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 டீ ஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்
- 3 பெரிய வெங்காயம்
- 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி ( சிறிதளவு )
- கறிவேப்பிலை( சிறிதளவு )
- எண்ணெய் (தேவையான அளவு )
செய்முறை :
முதலில் இரவில் கொண்டைக்கடலையை ஊறவைத்து கொள்ளவும். ஊறிய பின்பு அதை குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் பச்சை மிளகாய், வெங்காயம்,கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இவைகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அதன் பின் வேகவைத்துள்ள கொண்டைக்கடலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிறகு ஒரு பவுலில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அரைத்துவைத்துள்ள கொண்டக்கடலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசிமாவு, சீரக தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நமக்கு ஆரோக்கியமான மற்றும் ருசியான கொண்டைக்கடலை கட்லெட் ரெடியாகி விட்டது.
Read Also : இறால் வறுவல் எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Nutrition:
Serving: 450g | Carbohydrates: 35g | Sodium: 50mg | Calories: 210kcal | Protein: 10.7g | | Iron: 4.74mg | Protein: 10.7g | | Fiber: 9.6g | Calcium: 49mg | Potassium: 477mg | Vitamin C: 2.3mg | Vitamin A: 27IU .