Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க தண்ணீருடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடியுங்கள்..!

வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க தண்ணீருடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடியுங்கள்..!

Date:

- Advertisement -

வெயில் காலத்தில் வெப்பத்தின் காரணமாக உடலில் சூடானது அதிகமாக இருக்கும். இதனால் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால் முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி தண்ணீருடன் சில பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களை கொண்டு வெயில் காலத்தில் உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What's a Good Summer Drink in Tamil
What’s a Good Summer Drink in Tamil

What’s a Good Summer Drink in Tamil

ரோஜா இதழ் தண்ணீர்:

கோடைகாலத்தில் உண்டாகும் அதிக வெப்பநிலை காரணமாக உடல் சூடு மற்றும் பருக்கள் உண்டாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை தடுக்க, ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை எடுத்து குடிக்கவேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நன்மைகள்:

ரோஜா இதழுக்கு இயற்கையாகவே குளிர்விக்கும் பண்புகள் இருக்கிறது. இதனை நாம் தண்ணீருடன் சேர்த்து குடிக்கும் போது உடல் சூடு குறைகிறது. அதுமட்டுமில்லாமல், உடலில் வெப்பநிலை கூடுதலாகும்போது உடலில் வீக்கம் மற்றும் காய்ச்சல் இது போன்ற அறிகுறிகள் தோன்றும். இவைகள் வராமல் தடுக்க ரோஜா இதழ் தண்ணீரானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

What’s a Good Summer Drink in Tamil

இதையும் படிங்க : காரசாரமான சுவையில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இது மாதிரி ஒரு முறை செய்து பாருங்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

குங்குமப்பூ தண்ணீர்:

சிறிதளவு குங்குமப்பூ இதழ்களை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு, இத்தண்ணீரை மறுநாள் காலையில் எடுத்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெயிலினால் உண்டாகக்கூடிய உடல் சூடு குறையும்.

நன்மைகள்:

குங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருக்கிறது. இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் சூடு குறையும் மற்றும் சரும நிறம் சீராகவும் இருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெந்தய தண்ணீர்:

உடல் சூடு தணிய, தண்ணீரில்கொஞ்சம் வெந்தயத்தை சேர்த்து குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில் அந்த தண்ணீரை அருந்தலாம்.

நன்மைகள்:

வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த மருத்துவ பொருள் ஆகும். இது நம் உடலில் வரக்கூடிய பல்வேறு உடல் சூட்டு பிரச்சனைகளை போக்குகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கறிவேப்பிலை தண்ணீர்:

தண்ணீரில் சிறிதளவு கறிவேப்பிலை பொடியை கலந்து குடித்து வருவதன் மூலம் உடல் சூடு தணியும், அதுமட்டுமில்லாமல் முடி உதிரும் பிரச்சனையும் நீங்கும்.

நன்மைகள்:

கறிவேப்பிலை குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது. இதனை நாம் தண்ணீருடன் சேர்த்து குடிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : இந்த வகை மீன்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories