Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்தினமும் வேகவைத்த முட்டை ஒன்று போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் உண்டாகும்!

தினமும் வேகவைத்த முட்டை ஒன்று போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் உண்டாகும்!

Date:

- Advertisement -

முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியை விட மஞ்சள் கருவில் தான் நிறைய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. சிலர் முழுமையாக மஞ்சள் கருவை மட்டும் ஒதுக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மாத்திரம் எடுத்து கொள்கின்றனர். மஞ்சள் கருவில் அதிகமான புரதங்கள் இருகிறது. அதனால் அதையும் எடுத்துகொள்வது மிகமிக அத்தியாவசியமாகும்.

Health Benefits of Eggs

முட்டையின் பயன்கள்: உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை மிகவும் நல்லது என்று குழந்தையாக இருக்கும்போதே
கேள்விப்படுகிறோம்.ஒரு முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், பல உடல் நல பிரச்சனைகள் வராமல் இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். முட்டையை ஆம்பாயில் அல்லது பொரித்தோ உணவுகளாக சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவதில் தான் உடல்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வேகவைத்த eggs புரதத்தின் சிறந்த மூலமாகும். தசை திசுக்களை உருவாக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது. இவை தசைகளுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது. வேகவைத்த முட்டையை சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருக்களுக்கு இவற்றிற்கு இடையே ஊட்டச்சத்து கலவையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கின்றன. முட்டையின் வெள்ளைக்கரு மஞ்சள் கருவை விட அதிக புரதத்தை கொடுக்கிறது. முட்டையில் உள்ள வெள்ளைக்கரு பகுதியை விட மஞ்சள் கருவில் மூன்று மடங்கு கலோரிகள் இருக்கிறது. வெள்ளைப் பகுதியை விட மஞ்சள் கருவில் கூடுதலான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. சிலர் முழுமையாக மஞ்சள் கருவினை ஒதுக்கிவிட்டு, வெள்ளைக்கருவினை மட்டுமே எடுத்து கொள்கின்றனர். மஞ்சள் கருவில் கூடுதலான புரதங்கள் இருப்பதால் அதையும் எடுத்துகொள்வது மிகமிக அத்தியாவசியமாகும்.

இதையும் படிங்க : உங்களுக்கு ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைக்கும் பழக்கம் இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Health Benefits of Eggs
Health Benefits of Eggs

குழந்தை பருவத்திற்கு மிகவும் சிறந்தது:

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவைபடும் சத்துக்கள் முட்டையில்இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு முட்டைகளை தவறாமல் தருவது மிகவும் நல்லது. புரதம், வைட்டமின் A . வைட்டமின் B , வைட்டமின் C நிறைந்த இந்த உணவை சில பெற்றோர்கள் நிறைய கொடுக்கிறார்கள், குழந்தைகளுக்கு தினமும் முட்டை தருவது நல்லது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செரிமானத்தை மேம்படுத்த உதவும். மேலும், முட்டை சாப்பிடுவதால் பொதுவாக உடலில் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும். இதனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுத்தால் போதும். இதனால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டை வழங்கப்படுகிறது.

புரதம்:

காலை உணவுக்கு 2 நடுத்தர அளவிலான முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் 12 கிராம் புரதத்தை அளிக்கிறது, இது நாள் துவங்குவதற்கான சிறந்த வழியாகும். உடல் எடையை குறைப்பவர்களுக்கு மற்றும் தசையை இறுக செய்ய முயற்சி செய்பவர்களுக்கு போதுமான அளவு புரதத்தைப் பெறுவது முக்கியம். இதற்கு முட்டை சிறந்த காரணியாக உதவுகிறது. தசை திசு மற்றும் தோல், முடி, நகங்களை ஆரோக்கியமாக வளர முட்டை உதவி செய்ய பயன்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Health Benefits of Eggs
Health Benefits of Eggs – Health Benefits of Eggs – Health Benefits of Eggs

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வேகவைத்த முட்டை தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடலுக்கு வழங்குகிறது. வேகவைத்த முட்டையில் வைட்டமின் B12, வைட்டமின் D மற்றும் வைட்டமின் E ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நரம்பு செல்களை பராமரிக்க வைட்டமின் B12 அவசியம். வைட்டமின் D எலும்புகள் மற்றும் பற்களையும் பலப்படுத்துகிறது. மேலும், வேகவைத்த முட்டையில் வைட்டமின் E இருப்பதால் இது முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாக உதவுகிறது. இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.

இதையும் படிங்க : +2 கூட முடிக்கல .. ஆனால் இன்று பல கோடிக்கு அதிபதியான நடிகை.. யார் தெரியுமா..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கண் ஆரோக்கியம்:

வேகவைத்த முட்டையில் வைட்டமின் A , வைட்டமின் E , லுடீன், செலினியம் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற கண் ஆரோக்கியத்திற்கு நல்ல பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்கள் கண் பார்வையை மேம்பட செய்யும்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories