Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை தீமைகளா..?

கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை தீமைகளா..?

Date:

- Advertisement -

எங்கள் மீது அன்பு கொண்டவர்களுக்கும் அன்பு காட்ட இருப்பவர்களுக்கும் எங்களின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவின் மூலமாக கிவி பழம் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக பழங்கள் என்றாலே அது சத்துக்களும் நன்மைகளும் கொண்டதாக தான் இருக்கும். அப்படி பல வகை சத்துக்கள் நிறைந்த பழங்களில் கிவி பழமும் ஒன்றும். அது மாதிரி கிவி பழத்தை நம்மில் பலரும் சாப்பிட்டு இருப்போம். என்ன தான் இந்த கிவி பழங்களில் நன்மைகள் பல இருந்தாலும், அதை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அதனால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. ஆகவே இந்த பதிவின் மூலமாக கிவி பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க..!

Kiwi Fruit Side Effects in Tamil
Kiwi Fruit Side Effects in Tamil

கிவி பழத்தின் தீமைகள்: Kiwi Fruit Side Effects in Tamil

என்ன தான் கிவி பழத்தில் பல சத்துக்கள் கொண்டதாக இருந்தாலும், அதை நாம் அதிகமாக சாப்பிடும் போது கிவி பழம் உடலில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதை பெரியவர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொன்னார்கள். சரி கிவி பழத்தில் உள்ள தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : விஜய்யின் யூத் பட நடிகையா இவர்? அவரா இது அடையாளம் தெரியலையே.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

கணையத்தில் பாதிப்பு இருந்தால்:

கணையத்தில் பாதிப்பு இருப்பவர்கள், கிவி பழம் அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். காரணம் கிவி பழத்தை நிறைய சாப்பிடுவதால் கணைய அழற்சியை ஏற்படுத்துகிறது. கிவி பழத்தில் பொட்டாசியம், செரோடோனின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இருக்கிறது. ஆகவே இந்த சத்துக்கள் அதிக அளவு இரத்தத்தில் இருக்கும் ட்ரைகிளிசரைடு அளவை மாற்றுகிறது. இதன் காரணமாக கணையத்திற்கு பாதிப்பு உண்டாகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தோல் அழற்சி உண்டாகிறது:

ஒருவர் தினமும் கிவி பழம் சாப்பிட்டு வந்தால் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஆய்வுகளின்படி, கிவி நிறைய சாப்பிடுவது வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கிவி பழம் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு அனாபிலாக்ஸிஸ் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, சொறி, ஆஸ்துமா மற்றும் படை நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஒவ்வாமை பாதிப்புக்கள் வரலாம்:

கிவி பழத்தில் உள்ள அதிகப்படியான நுகர்வு காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் உண்டாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நாம் கிவி பழம் அதிகமாக சாப்பிடும் போது, தலைவலி, வாய் கூச்சம், தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், தலைச்சுற்றல், வயிற்று வலி, சோர்வு மற்றும் இதயத் துடிப்பு இது போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வயிற்று கோளாறுகள்:

கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று தான் வயிற்று கோளாறுகள். ஒருவர் கிவி பழம் நிறைய சாப்பிடும் போது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட வயிற்று கோளாறுகளை உண்டாக்குகிறது. அதுமட்டுமில்லாமல், இது மயக்கம்,காய்ச்சல், வீக்கம், குளிர், தசை பலவீனம், விழுங்குவதில் சிரமம் மற்றும் வியர்வை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்கள் கிவி பழம் சாப்பிடலாமா..?

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கிவி பழம் சாப்பிடும் முன் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. மேலும் கிவி பழம் எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?

வாய்வழி பிரச்சனைகள்:

ஒருவர் அளவுக்கு அதிகமாக கிவி பழம் சாப்பிடுவதால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது வாய், உதடுகள் மற்றும் நாக்கு இவைகளில் வீக்கம், அரிப்பு இது போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories