நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் எட்டு மணி நேரம் வரை இருந்து வேலை செய்து வருகிறோம். இதனால் நம் உடலில் எந்த ஒரு அசைவுகளும் உண்டாவதில்லை. இப்படி உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது உடலில் பெரும் பிரச்னைகளை உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்தல், அருகில் இருக்கும் கடைகளுக்கு இருசக்கர வாகனங்களைஎடுத்து போகாமல் நடந்து செல்லுதல், கொஞ்சம் தூரமான இடங்களுக்கு சைக்கிள் ஓட்டி செல்லுதல் போன்ற செயல்களை செய்யலாம்.
Women are lazier than men

உடல் உழைப்பு
இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி பேர் உடல் உழைப்பு இன்றி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் ஆண்களை விட உடல் உழைப்பில் அதிகளவில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளவில் வயது வந்தோர் 31 % பேர் குறைந்த உடல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை வயது வந்தோர் 49.4 % பேர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் 45.7 சதவீதமாகவும், பூட்டானில் 9.9 சதவீதமாகவும் மற்றும் நேபாளத்தில் 8.2 சதவீதமாகவும் இருக்கிறது. அதிக வருமானம் உள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 48 சதவீதமும் மேலும் தெற்காசியில் 45 சதவீதமும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000ஆம் வருடத்தில் 22.3 சதவீதமாக இருந்த நிலையில், 2022ஆம் வருடத்தில் 49.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த நிலை 2030ஆம் வருடம் வரை தொடர்ந்தால் வயது வந்தவர்களில் 59.9 % பேர் செய்ய வேண்டிய தேவையான உடல் வேலைகளை ஈடுபடமாட்டார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றது. போதிய உடல் உழைப்பு இல்லாததால் தொற்று நோய், உடல் பருமன், மனநலம் பாதிப்பு போன்ற பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம் என சமீபத்தில் ஆய்வில் சொல்லப்படுகிறது. மேலும், மாரடைப்பு, நீரிழிவு நோய், கேன்சர் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் இந்தியர்களுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2010 மற்றும் 2022 க்கு மத்தியில் வயது வந்தவர்களில் ஐந்து சதவீதம் பேர் உடல் செயலற்ற தன்மையால் உடல் மோசமான நிலையில் இருப்பதாக தெரிகிறது. ஆண்களை விட பெண்கள் குறைந்த உடல் உழைப்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இந்த சீக்ரெட் பட்டன் எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா..? 90% பேருக்கு தெரியாது!
தீர்வு என்ன?
அதாவது, உடல் உழைப்பில் ஆண்கள் 42 சதவீதமும், பெண்கள் 57 சதவீதமும் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்ற வயதுக்குரியவர்களை விட சுறுசுறுப்பாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்கள் ஒரு வாரத்தில் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் மாரடைப்பு, பக்கவாதம், கேன்சர் உள்ளிட்ட நோயால் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நவீன காலத்தில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் எட்டு மணி நேரம் வரை இருந்து வேலை பார்த்து வருகிறோம். இதனால் நம் உடலில் எந்த ஒரு அசைவுகளும் உண்டாவதில்லை. இப்படி உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது உடலில் பெரும் பிரச்னைகளை உண்டாக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்தல், அருகில் இருக்கும் கடைகளுக்கு இருசக்கர வாகனங்களை எடுத்து செல்லாமல் நடந்து செல்ல வேண்டும், சற்றே தொலைவான பகுதிகளுக்கு சைக்கிளில் செல்ல வேண்டும், விளையாடுவது, மிதமான ஓடுதல் போன்ற செயல்களை செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உழைப்பில் ஈடுபட்டால் ரத்த ஓட்டம் கூடுதலாகும், ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் கூடுதலாகும். எனவே, ஒரு நாளைக்கு சுமார் 1 மணி நேரமாவது நடைபயிற்சியினை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : சத்தானபாசிப்பயறு சாலட் ரெசிபி எவ்வாறு செய்யலாம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇