Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் பிரச்சனை குறித்து ஏன் சார் நீங்க பேசல ? இயக்குனர் பாண்டிராஜ் கேட்ட கேள்வி..வெளிப்படையாக...

பருத்திவீரன் பிரச்சனை குறித்து ஏன் சார் நீங்க பேசல ? இயக்குனர் பாண்டிராஜ் கேட்ட கேள்வி..வெளிப்படையாக பதிலளித்த சூர்யா..!

Date:

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் சூர்யா. தற்போது சிவாவின் இயக்கத்தில் உருவாகும் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தன் 44 ஆவது திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் சூர்யா.

கடந்த ஏப்ரல் மாதம் தான் சூர்யா 44 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகின்றது.இதற்கிடையில் சூர்யா மற்றும் சுதா கொங்காரா இருவரது கூட்டணியில் உருவாகவிருந்த புறநானூறு திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வாடிவாசல் படமும் எப்போது ஆரம்பிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

why dont talk paruthiveeran problem

why dont talk paruthiveeran problem
why dont talk paruthiveeran problem

கங்குவா படத்தை சூர்யா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். கண்டிப்பாக இப்படம் சூர்யாவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கூட்டி செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையில் வெளியாக போவதாக தெரிகின்றது.

நீங்கள் முகப்பருக்களை கிள்ளும் போது என்ன நடக்கும் தெரியுமா? முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இதை தடவினால் போதும்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அமீரின் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் வருடம் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் இப்படத்தின் போதே இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் பிரச்சனை உண்டானது. அந்த பிரச்சனை தற்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து சூர்யா பேசாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் கிளம்பியது. இந்த கேள்வியை இயக்குனர் பாண்டிராஜ் ஒரு நாள் நேரடியாக சூர்யாவிடமே கேட்டிருக்கிறார். ஏன் சார் இந்த பிரச்னையை பற்றி பேசாமல் உள்ளீர்கள் ? இந்த பிரச்சனை பற்றிய உங்களின் தரப்பு நியாயத்தை நீங்கள் சொன்னால் தான் இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்றாராம் பாண்டிராஜ்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உடனே சூர்யாவும் ஒரு அறிக்கையினை தயார் செய்திருக்கின்றார். அந்த சமயத்தில் தான் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டால் சரியாக இருக்காது என சொன்னாராம். சில தினங்கள் கழித்து பாண்டிராஜ் கேட்டதற்கு, விடுங்க சார், என் பக்கம் தப்பு உள்ளதாக சிலர் சொல்றாங்க. .அப்படியே இருந்துட்டு போகட்டும் என்று சொன்னாராம் சூர்யா. இதைப்பற்றி பாண்டிராஜ் அண்மைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories