Friday, July 11, 2025
HomeUncategorizedஉங்களுக்கு ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைக்கும் பழக்கம் இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

உங்களுக்கு ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைக்கும் பழக்கம் இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

Date:

- Advertisement -

பலர் ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைப்பதால் அது எப்பொழுதும் ஃபிரஷாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் ஃப்ரிட்ஜில் பிரெட்டை சேமித்து வைப்பதால் அது எதிர்மறையான விளைவுகளைஉண்டாக்கும். அது சீக்கிரம் கெட்டுவிடும், அதோடு அதனுடைய சுவையும் மற்றும் அமைப்பும் மாறுபடுகிறது.

பிரெட்டானது பெரும்பாலானவர்களின் வீடுகளில் காணப்படும் ஒரு தின்பண்டம் ஆகும். பசி எடுக்கும் நேரத்தில் வீட்டில் உணவு இல்லாத சமயத்தில் அவசரத்திற்கு பிரெட் பயன்படும் என்பதற்காகவே பலர் அதை வீட்டில் வாங்கி வைப்பதுண்டு.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

why bread should not in fridge
why bread should not in fridge

ஆனால் பிரெட்டை நம்மால் பல நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. நாம் பிரெட்டை சேமித்து வைக்கும் முறையானது அதன் தரம் மற்றும் அது கெட்டு விடாமல் இருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. பலர் பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது எப்பொழுதும் கெட்டுப்போகாமல் ஃபிரஷாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஃப்ரிட்ஜில் பிரெட்டை சேமித்து வைப்பதால் அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அது விரைவில் வீணாகி போகும், அதோடு அதனுடைய சுவையும் மற்றும் அமைப்பும் மாறுபடுகிறது. ஏன் பிரெட்டை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது என்பதை பற்றி ஒரு சில காரணங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

why bread should not in fridge

பொதுவாக பிரெட்டை தயாரிக்கும் பொழுது அதில் இருக்கும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் நீரை உறிஞ்சி கெட்டியாகிறது. இதன் காரணமாகவே பிரெட்டானது மென்மையாகவும், பொசு பொசுவென்ற அமைப்பையும் பெறுகிறது. எனினும் பிரெட்டை நாம் குளிர் நிலையில் வைக்கும் பொழுது அந்த ஸ்டார்ச் மூலக்கூறுகள் மீண்டும் கிரிஸ்டலாக மாறத் தொடங்கி அதிலிருந்து நீரை வெளியேற்றுகிறது. இதனால் பிரெட் கெட்டியாக மாறி, வறண்ட அமைப்பையும் பெறுகிறது.

ஸ்டார்ச் உறுதியாகும் விகிதத்தில் வெப்பநிலை ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் இருக்கும் வழக்கமான வெப்ப நிலையில் ஸ்டார்ச் வேகமாக மீண்டும் படிகமாகிறது. ஆகவே பிரெட்டை பிரிட்ஜில் சேமித்து வைப்பதற்கு பதிலாக சாதாரண அரை வெப்ப நிலையில் சேமித்து வைப்பது சிறந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

why bread should not in fridge1
why bread should not in fridge1

பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதால் அது வேகமாக கெட்டுப் போவது மட்டுமின்றி, அதன் அமைப்பு மற்றும் சுவையிலும் மாற்றம் உண்டாகிறது. பெரும்பாலும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிரெட்டை சாப்பிடும் போது அது விழுங்குவதற்கு செருமமாக இருப்பதை நீங்கள் நிஜ்ஜயமாக உணர்ந்து இருப்பீர்கள். ஸ்டார்ச் மூலக்கூறுகளில் இருக்கும் ஈரப்பதமானது வெளியேற்றப்பட்டதே இதற்கு காரணம்.

அதே நேரத்தில் சுவையை குறித்து பேசுகையில் இந்த குளிர்ச்சியூட்டம் செயல்முறையின் பொழுது பிரெட்டானது குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்ட பிற உணவுகளில் இருந்து வரக்கூடிய வாசனைகளை உறிஞ்சி கொள்கிறது. இதனால் அது மோசமான சுவை உடையதாக மாறுகிறது. பலர் பிரெட்டில் பூஞ்சை வளராமல் இருப்பதற்காக அதனை ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம் என்று கருதுவர். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பூஞ்சை வளர்ச்சி தாமதப்படுத்தப்பட்டாலும், அது பாதிக்க போகும் செயல்முறை விரைவுப்படுத்தப்படுகிறது. எனவே பிரெட்டை அறை வெப்ப நிலையில் ஈரப்பதம் இல்லாத காற்று உள்ளே செல்ல முடியாத ஒரு டப்பாவில் சேமித்து வைப்பதன் மூலம் அதில் பூஞ்சை வளர்ச்சி உண்டாவதை தவிர்க்கலாம். மேலும் அதன் அமைப்பு மற்றும் சுவையில் எந்த ஒரு மாற்றமும் உண்டாகாது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதே சமயத்தில் அறை வெப்ப நிலையில் நீங்கள் பிரெட்டை சேமிக்கும் பொழுது அதனை பிளாஸ்டிக் பையில் சேமித்து வைக்க கூடாது. ஏனெனில் பிளாஸ்டிக் பைகள் ஈரப்பதம் நிறைந்த சூழலை ஏற்படுத்தி, அதனால் பூஞ்சை வளர்ச்சி உண்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பைகளில் பிரெட்டை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அந்த பிரெட்டை உடனே சாப்பிட்டு விட முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் பிரெட்டை இனி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும் செயல்முறையில் ஈடுபட வேண்டாம். அது கட்டாயமாக அதன் சுவையையும், தரத்தையும் மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சீக்ரெட் பட்டன் எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா..? 90% பேருக்கு தெரியாது!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories