விசு படம் என்றாலே மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து விடுவார்கள். காரணம் அனைத்துமே குடும்பக் கதை தான். குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளையும், கடும் சிக்கல்களையும் பின்னிப் பிணைத்து முடிச்சு போட்டு விடுவார்.
பின்னர் அந்த பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுவாரசியமான திருப்பங்களால் லாவகமாக சரி செய்து விடுவார். இடையிடையே பாடல்கள், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என்று வந்து ரசிகர்களைக் கலகலப்பாக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த வகையில் ஒரு முறை அவருக்கே சோதனை வந்துவிட்டது. அதுவும் கவியரசர் கண்ணதாசனால். அது எப்படி வந்தது என்று பார்க்கலாம் வாங்க.
Read Also : ஜிவி பிரகாஷ் தனுஷ் படம் குறித்து சொன்ன தகவல்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Vishu tell the story to Kannadasan

விசு,குடும்பம் ஒரு கதம்பம் படத்திற்குப் பாட்டு எழுதுவதற்காக கண்ணதாசனிடம் செல்கிறார். படத்தின் கதை முழுவதையும் இன்ச் பை இன்ச்சாக கூறுகிறார். ஆனால் கவியரசரோ தன் நண்பன் எம்எஸ்.விஸ்வநாதனிடம் பேசியபடி அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இதை பார்த்துக்கொண்டே இருந்த விசுவிற்கு கோபமும், எரிச்சலும் வந்து விட்டது.
நாம் இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இவர் கொஞ்சமும் கவனிக்காமல் இப்படி அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாரே என எரிச்சல் அடைகிறார். கடைசியில் உதவியாளரை கூப்பிட்டு இப்படி வரிகளைப் போடுகிறார் கவியரசர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
‘குடும்பம் ஒரு கதம்பம்,
பல வண்ணம் பல வண்ணம்,
தினமும் மதி மயங்கும்,
பல எண்ணம் பல எண்ணம்,
தேவன் ஒரு பாதை,
தேவி ஒரு பாதை,
காலம் செய்யும் பெரும் லீலை…’ அவ்வளவு தான்.
விசுவிற்கு அளவு மிஞ்சிய ஆச்சரியம். மொத்தக்கதையும் வந்துவிட்டதே… என்று. அதுமட்டுமின்றி அவரது சந்தேகத்தையும் தீர்த்து வைத்து இருக்கிறார் விசு.
1981ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விசு வசனம் எழுதிய படம் குடும்பம் ஒரு கதம்பம். பிரதாப் மற்றும் சுகாசினி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Leo – I am Scared Song Lyrics | ஐ ஆம் ஸ்கேர்ட் பாடல் வரிகள்