Vinayagar Thengai Venduthal : எந்தெந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் காணிக்கை செலுத்தலாம்.

கோவிலுக்கு சென்றாலே நம் கஷ்ட்டங்களையும் மற்றும் குறைகளையும் சொல்லி புலம்புவோம். அதனோடு எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இதை சரி செய்தால் உனக்கு அபிஷேகம் செய்கிறேன் அல்லது 101 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கு ஏற்றவாறு வேண்டுதல் மாறுபடும். உதாரணத்திற்கு வீரனார் என்றால் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பார்கள். அது போல பல பேர் தேங்காய் வேண்டுதல் தான் வேண்டி கொள்வார்கள். இந்த தேங்காய் வேண்டுதல் ஆனது ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதனை பற்றி இப்போதுதெறிந்து கொள்வோம் வாங்க..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விநாயகருக்கு தேங்காய் | Vinayagar Thengai Venduthal
சில பேருக்கு திருமணம் யோகம் தடைப்பட்டு கொண்டே இருக்கும், இதனால் கோவில் கோவிலாக போய் வேண்டி கொள்வார்கள். இப்படி நீங்கள் வேண்டி கொள்வதோடு மட்டுமின்றி பதினோரு தேங்காய் உடைக்க வேண்டும்.
திருமணம் நடந்த பின்பு அந்த தம்பதிகளிடம் அனைவரும் கேட்பது ஏதும் நல்ல செய்தி இல்லையா என்று விசாரிப்பார்கள். சில பேருக்கு அந்த பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். சில பேருக்கு வருடங்கள் சென்றாலும் கிடைப்பது கிடையாது. அதனால் பிள்ளை பேறு உண்டாக 9 தேங்காய் உடைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எவ்வளவு தான் சம்பளம் வாங்கினாலும் அன்றைய தின செலவுகளுக்கும் சரியாகி போய் விடுகிறது என்று கவலைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடன் பிரச்சனை என்பது எல்லோரும் சந்திக்க கூடிய ஒன்றாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு ஏழு தேங்காய்களை உடைக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க ஐந்து தேங்காய்களை உடைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு மூன்று தேங்காய்களை உடைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தொழில் செய்பவராக இருப்பவர்கள் அதில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் எண்ணுபவர்கள். அதற்கு நீங்கள் 3 தேங்காய்களை உடைக்க வேண்டும்.
நன்கு படித்திருப்பீர்கள், ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை என்று தவித்து கொண்டுள்ளவர்கள். அதற்கு தெய்வத்திற்கு 3 தேங்காய்களை உடைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் 5 ஆலயங்களின் கும்பாபிஷேகம்
எப்போது தேங்காய் உடைக்க வேண்டும்:
வேண்டுதல் செய்வதற்கான தேங்காய்களை மாதம் ஒரு தடவை உடைக்க வேண்டும், அதுவே உங்களுக்கு சீக்கிரம் பலனை அடைய வேண்டுமென்றால் வாரதிற்கு ஒரு முறை தேங்காயை உடைக்க வேண்டும். அதுவும் இந்த தேங்காய்களை அரசமரத்தடியில் அமைந்துள்ள பிள்ளையாருக்கு உடைப்பது மிகவும் சிறந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Rasam Seiyum Murai Easy | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!