Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குVijayakanth followed 5 things : கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் கடைபிடித்த...

Vijayakanth followed 5 things : கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் கடைபிடித்த 5 விஷயங்கள்..

Date:

- Advertisement -

Vijayakanth followed 5 things : சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். பல இடங்களில் அவமானங்களை சந்தித்து அதன் பின் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் முன்னேறியவர். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி போன்ற படங்கள் மூலம் முன்னேறியவர்.

80,90 காலகட்டங்களில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தார். பல வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற நடிகர்கள் போன்று இல்லாமல் சில கொள்கைகளை கடைசி வரைக்கும் விஜயகாந்த் கடைபிடித்தார். சினிமாவில் மட்டுமில்லாமல், நிஜவாழ்க்கையிலும் ஒரு கொள்கையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படி சினிமாவில் அவர் கடைசிவரை கடைப்பிடித்து வந்த 5 விஷயங்களை குறித்து தெரிந்துகொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vijayakanth followed 5 things

Vijayakanth followed 5 things
Vijayakanth followed 5 things

முதலில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழி திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். பலமுறை வாய்ப்புகள் வந்த நேரத்திலும் விஜயகாந்த் அதில் உறுதியாகவே இருந்தார். கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் பிற மொழி படங்களில் நடித்தது இல்லை.

இரண்டாவது எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். நல்லது செய்யும், நல்லதை பேசும், அறிவுரைகளை சொல்லும் ஹீரோவாக நடிக்க விரும்பினார் விஜயகாந்த். கடைசி வரை அதை கடைபிடித்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மூன்றாவது எத்தனை கோடி தந்தாலும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். எனக்கு கொடுக்கிற சம்பளத்தை விற்கக்கூடிய பொருள் மீது வைத்து மக்களிடம் அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, அதை செய்யமாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

Read Also : குளம் இதை வேறு எப்படி எல்லாம் சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நான்கவது பிளே பாய் வேடத்தில் நடிக்க மாட்டேன், பெண்களை மோசமாக சித்தரிக்கூடிய படங்களில் நடிக்க மாட்டேன் என்பதையும் விஜயகாந்த் கடைபிடித்தார்.

5வதாக சம்பளத்திற்கென்று ஆசைப்பட்டு விஜயகாந்த் எந்த படத்திலும் இதுவரை நடித்தது கிடையாது. சம்பளத்தை பெரிதாக நினைக்காத ஒரே ஹீரோ விஜயகாந்த் மட்டும் தான் என பல தயாரிப்பாளர்கள் அவரை பற்றி பேசியுள்ளனர். சம்பளமே வாங்காமலும், தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் சம்பளத்தை குறைவாக வாங்கியும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories