Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குமகாராஜா பட இயக்குநரை நேரில் பார்த்து வாழ்த்து கூறிய விஜய்.. நிதிலன் சொன்ன விஷயம்!

மகாராஜா பட இயக்குநரை நேரில் பார்த்து வாழ்த்து கூறிய விஜய்.. நிதிலன் சொன்ன விஷயம்!

Date:

- Advertisement -

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து ஓடிக் கொண்டிருக்கிறது. குரங்கு பொம்மை என்ற சிறப்பான படத்தை அளித்த நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் 6 வருடங்களுக்கு பிறகு இந்தப் படம் 2 வது படமாக வெளியாகியுள்ளது.

தன்னுடைய அழுத்தமான கதைக்களம் மற்றும் திரைக்கதை அமைத்து மகாராஜா படத்திற்கு வெயிட் ஏற்றியுள்ளார் நிதிலன் சாமிநாதன். இந்நிலையில் இந்தப் படம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்துள்ளது. கடந்த 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

vijay appreciated maharaja movie (2)
vijay appreciated maharaja movie

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து, மிகப்பெரிய வெற்றி படமாக மாறியுள்ளது. படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இந்தப் படம் தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் அமைந்ததால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : பதினேழு வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து; அடுத்து என்ன நடந்தது என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இயக்குநர் நிதிலன் சாமிநாதன்: முன்னதாக குரங்கு பொம்மை படத்தின் மூலம் கோலிவுட்டின் பார்வையை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிதிலன் சாமிநாதன், 6 வருடங்களுக்கு பிறகு மகாராஜா திரைப்படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. படம் தொடர்ந்து ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களது பாராட்டுக்களை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமாக ரிலீசான மகாராஜா படம் அவரது கேரியர் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் லீனியர் பாணியில் அமைத்திருந்தார் நிதிலன் சாமிநாதன்.

vijay appreciated maharaja movie (1)
vijay appreciated maharaja movie

படக்குழுவினரை பாராட்டிய விஜய்: இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் விஜய், நிதிலன் சாமிநாதன் மற்றும் படக்குழுவினரை நேரில் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போடோக்களை வெளியிட்டுள்ள நிதிலன் சாமிநாதன், இந்த சந்திப்பிற்கு தன்னுடைய சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை உண்டாக்கி கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள நிதிலன் சாமிநாதன், நேரில் சந்தித்தபோது மகாராஜா படத்தை பற்றிய விஜய்யின் கருத்துக்கள் தன்னை மிகப்பெரிய ஆச்சர்ய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?

நிதிலன் சாமிநாதன் நெகிழ்ச்சி: மகாராஜா படம் பற்றி விஜய்யின் பாராட்டுக்கள் மிகப்பெரியது என்றும் நிதிலன் கூறியுள்ளார். விஜய்யின் பாசம், ஆதரவு மற்றும் பாராட்டுக்கு நன்றி சொன்ன நிதிலன், லவ் யூ அண்ணா என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர்களான சுதன் மற்றும் ஜெகதீஷிற்கும் நன்றி கூறியுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories