Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்ஏன் எல்லா சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

ஏன் எல்லா சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

Date:

- Advertisement -

Vetrilai Pakku Koduthal In Tamil : பொதுவாக வீட்டில் நிறைய விஷேசங்கள் நடக்கும். அத்தகைய விஷேசங்கள் நன்மை மற்றும் தீமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிலை பாக்கு கட்டாயமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சாமி கும்பிடும் போது எல்லா தெய்வங்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து தான் சாமி கும்பிடுவார்கள். நாம் என்ன நினைப்போம் என்றால் வெற்றலை பாக்கு தானே இதில் என்ன இருக்கும் என்று,ஆனால் இந்த வெற்றிலை பாக்கு இரண்டிற்கும் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் அதற்கு பின்னால் ஒரு காரணத்தை வைத்துதான் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் இதற்கான காரணத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

Vetrilai Pakku Koduthal In Tamil
Vetrilai Pakku Koduthal In Tamil

ஒரு வீட்டில் சுபகாரியம் அல்லது துக்க காரியம் இரண்டில் எது நடந்தாலும் அங்கு வெற்றிலை பாக்கு கட்டாயமாக கொடுப்பார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதுமட்டும் இல்லாமல் வீட்டில் திருமணம் என்றால் மற்றவருக்கு பத்திரிக்கை கொடுத்தால் வெற்றிலை பாக்கு வைத்து அவர்களை அழைப்பார்கள். இப்படி எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு காரியத்திற்கு முதலில் வெற்றிலை பாக்கு வைப்பதற்கான காரணம் என்னவென்றால்..?

Vetrilai Pakku Koduthal In Tamil

வெற்றிலையில் வைட்டமின் C, புரதம் மற்றும் கலோரி ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : யுவஸ்ரீ பெயருக்கு அர்த்தம் என்ன !

இவை இரண்டுடனும் சிறிது இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட பாக்கினையும் வைத்து நாம் சாப்பிடும் போதும் நாம் சாப்பிட உணவு எளிதில்செரிமானம் அடைவதற்கு உதவியாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வீட்டில் சுபகாரியம் மற்றும் துக்க காரியம் இந்த நிகழ்ச்சிகளில் எது நடந்தாலும் அங்கு புது விதமான சாப்பாடு போடுவார்கள். வீட்டிற்கு வந்துள்ள உறவினர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு போட்டு கொண்டால் சாப்பாடு எளிதில் செரிமானம் அடைந்து விடும் என்பதே வெற்றிலை பாக்கு கொடுப்பதற்கான உண்மையான காரணம் ஆகும்.

அதுபோல சாமி கும்பிடும் போதும் வெற்றிலை பாக்கு வைப்பார்கள். அப்படி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் கொண்டிருக்கிறார்கள். அதனை சாமிக்கு வைத்து வழிபடுவதால் குடும்பம் செழித்து நன்றாக இருக்கும் என்பது நமது முன்னோர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories