Friday, July 11, 2025
Homeஆன்மீகம்வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்

Date:

- Advertisement -

சில பரிகாரங்களை எல்லாம் பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் உண்டாகும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை அனைத்தும் போன போக்கில் விளையாட்டாக செய்தாலும் அதன் மூலம் நமக்கு பெரிய பெரிய பலன்கள் ஏற்படும். அப்படிப்பட்ட சுலபமான ஆற்றல் நிறைந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோராலும் இந்த பரிகாரத்தை எளிமையாக செய்ய முடியும்.

velli kizhamai seyya vendiya dhanam

எந்த ஒரு சிரமமும் இல்லை. வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜையை குறித்த தகவல் தான் இது. அனைவரும் தான் வெள்ளிக்கிழமை பூஜை செய்கின்றோம் இதில் என்ன சிறப்பு என்று யோசிக்காதீங்க. பதிவை தொடர்ந்து படித்து இந்த சிறிய விஷயத்தை தெரிந்து கொண்டாலே போதும் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகள் தீரும். வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய தானம் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை காலை நேரத்திலோ, மாலை நேரத்திலோ, மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் வழக்கம் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!

velli kizhamai seyya vendiya dhanam
velli kizhamai seyya vendiya dhanam

இதற்கு ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, புதுசாக மலர்களை போட்டு, விளக்கு ஏற்றி, ஊதுவத்தி ஏற்றி கொஞ்சம் பிரசாதம் செய்து வைத்து, கற்பூர ஆரத்தி காண்பிப்போம். இதுதான் பூஜை. இந்த பூஜையில் பாசிப்பருப்பால் செய்த பாயாசத்தை நெய்வேத்தியமாக வைக்கப்பட வேண்டும். உங்கள் சௌகரியம், எந்த அளவுக்கு பாயாசம் செய்கிறீர்களோ செய்துகொள்ளுங்கள். பூஜையை முடித்துவிட்டு 2 டம்ளரில் அந்த பாயாசத்தை ஊற்றி, சாப்பாட்டிற்காக கஷ்டப்படும் 2 பேருக்கு உங்கள் கையால் அந்த பொருளை தானம் செய்யுங்கள். பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றால் கூட 2 யாசகர்கள் கிடைப்பார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவர்களுக்கு 2 பிளாஸ்டிக் டம்ளரில் இந்த பாயசத்தை ஊற்றி உங்கள் கையால் தானம் செய்தாலே போதும். உங்கள் பண பிரச்சனைகள் அன்றிலிருந்து குறைய தொடங்கிவிடும். குறைந்தது 2 பேருக்கு தானம் செய்யவும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பாயசத்தை தானம் கொடுக்கலாம். இனிப்பு பிரசாதத்திற்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கு. அதிலும் பாசிப்பருப்பில், வெல்லம் போட்டு நீங்கள் செய்யக்கூடிய தானம் நல்ல பலனை தரும். எப்போது இனிப்பு சாப்பிட்டாலும் அதை நீங்க மட்டுமே சாப்பிடாமல். உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டு தான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காரணம் இனிப்பு பொருளை பகிரும் போது நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தினமும் ஒரு 1/2 ஸ்பூன் சர்க்கரையை எறும்புக்கு தானம் செய்தாலும் அந்த புண்ணியம் உங்களை வந்து சேரும் என்பதும் நம்பிக்கையாக கூறப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெள்ளிக்கிழமை அன்று இந்த பாயாசத்தை செய்து தானம் செய்யுங்கள் ‌மேலே கூறிய ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை நம்பிக்கையோடு கடைபிடித்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு நன்மை வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் தொடர்பான இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories