Friday, July 11, 2025
Homeசைவம்அசைவத்தை மிஞ்சிடும் ருசியில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி?

அசைவத்தை மிஞ்சிடும் ருசியில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி?

Date:

- Advertisement -

Veg Keema Masala Recipe in Tamil : நம் அனைவருக்கும் எதாவது ஒரு புதுமையான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற நினைக்க தோன்றும். அதிலும் சைவ உணவு பிரியர்களுக்கு இந்த ஆசையானது இருக்கும். அதனால் அவர்கள் ருசியான உணவுகளை தேடி சென்று விருப்பமாக சாப்பிடப்படும் பல வகையான சைவ உணவுகளில் இந்த சைவ கீமா அல்லது சோயா கீமா. அப்படி எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய சோயா கீமா அல்லது சைவ கீமா நம் வீட்டிலேயே ஆரோக்கியமான வகையில் எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம்.

Veg Keema Masala Recipe in Tamil
Veg Keema Masala Recipe in Tamil

Veg Keema Masala Recipe in Tamil

தேவையான பொருட்களை

  • 100 கிராம் – சோயா
  • 2 – பட்டை
  • 1 – ஏலக்காய்
  • 1/2 டீ ஸ்பூன் – சீரகம்
  • 1 கப் – பச்சை பட்டாணி
  • 2 – கிராம்பு
  • 1 – பிரிஞ்சி இலை
  • 2 – தக்காளி
  • 2 – பெரிய வெங்காயம்
  • 1டீ ஸ்பூன் – மிளகாய் தூள்
  • 1டீ ஸ்பூன் – பூண்டு, இஞ்சி பேஸ்ட்
  • 1/2 டீ ஸ்பூன் – மஞ்சள் தூள்
  • 1 டீ ஸ்பூன் – மல்லி தூள்
  • 1 டீ ஸ்பூன் – சீரக தூள்
  • 1 டீ ஸ்பூன் – கரம் மசாலா
  • 1 டேபிள் ஸ்பூன் – வெண்ணெய்
  • 1 கைப்பிடி அளவு – கொத்தமல்லி இலை
  • தண்ணீர் – தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் – உப்பு

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் அதில், நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் சோயாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். பின்னர், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!

அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள 1 கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வேகவைக்கவும். பிறகு, 2 தக்காளி மற்றும் 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஏலக்காய், 2 கிராம்பு, 2 பட்டை, 1/2 டீ ஸ்பூன் சீரகம் மற்றும் 1 பிரிஞ்சி இலை இவைகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள 2 தக்காளி மற்றும் 2 பெரிய வெங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்னர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
1 டீஸ்பூன் மல்லி தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவைகள் அனைத்தும் நன்றாக ஒன்றுக்கொன்று கலந்து பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள சோயா மற்றும் வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும். இவை நன்றாக கொதித்தவுடன் வெண்ணெய் மற்றும் பொடியாக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்போது நமக்கு அருமையான சைவ கீமா ரெசிபி (Veg Keema Masala Recipe in Tamil ) தயாராகி விட்டது.

Read Also : இறால் மிளகு வறுவல் செய்வது எப்படி?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories